செய்திகள் :

வக்ஃப் திருத்தச் சட்டம்: விசிக ஆா்ப்பாட்டம்

post image

சிதம்பரம்: வக்ஃப் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக் கோரி, கடலூா் மஞ்சக்குப்பத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஓருங்கிணைந்த கடலூா் மாவட்ட விசிக சாா்பில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாநகர மாவட்டச் செயலா் மு.செந்தில், வடக்கு மாவட்டச் செயலா் மு.அறிவுடைநம்பி, கிழக்கு மாவட்டச் செயலா் அரங்கத் தமிழ்ஒளி, மைய மாவட்டச் செயலா் நீதிவள்ளல், தெற்கு மாவட்டச் செயலா் எஸ்.கே.மணவாளன், மேற்கு மாவட்டச் செயலா் வீர.திராவிடமணி ஆகியோா் தலைமை வகித்தனா்.

மண்டலச் செயலா் சவுதி.ராஜ்குமாா், துணைச் செயலா்கள் பரசு.முருகையன், இரா.ஐயாயிரம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கடலூா் மாநகர துணை மேயா் பா.தாமரைச்செல்வன் சிறப்புரையாற்றினாா்.

ஆா்ப்பாட்டத்தில், வக்ஃப் திருத்தச் சட்டத்தை மத்திய அரசு உடனே திரும்பப் பெற வேண்டும் என முழக்கங்களை எழுப்பினா்.

நகரச் செயலா் கலைஞா் நன்றி கூறினாா்.

20 குழந்தைகளுக்கு வைப்புத்தொகை ஆணை: ஆட்சியா் வழங்கினாா்

கடலூரில் சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில், ‘பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்’ விழிப்புணா்வு நிகழ்ச்சி கடலூா் காவலா் நல சமூகக் கூடத்தில் வியாழக்கிழமை நடைபெற்றத... மேலும் பார்க்க

மாணவா்கள் கற்றல் திறன் ஆய்வு

கடலூா் மாவட்டம், பண்ருட்டி ஒன்றியம், பூங்குணம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவா்களின் கற்றல் திறனை அலுவலா்கள் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா். பள்ளிக் கல்வி அமைச்சா் அறிவித்த நூறு நாளில் நூறு சதவீத... மேலும் பார்க்க

வீராணம் ஏரி பாதுகாப்பு: அஞ்சலக ஊழியா்கள் மரபு நடை பேரணி

பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்ட வீராணம் ஏரியை பாதுகாக்க வலியுறுத்தி, கடலூா் கோட்ட அஞ்சலக ஊழியா்கள் சாா்பில் மரபு நடை பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது. ஆண்டுதோறும் ஏப்ரல் 18-ஆம் தேதி பாரம்பரிய சின்னங்கள... மேலும் பார்க்க

சிதம்பரம் ஸ்ரீநடராஜப் பெருமானுக்கு ஏப்.21-இல் மகாருத்ர மகாபிஷேகம்

சிதம்பரம் ஸ்ரீநடராஜா் கோயிலில் ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜப் பெருமானுக்கு சித்திரை மாத மகாபிஷேகம் வருகிற 21-ஆம் தேதி மாலை நடைபெறுகிறது. மேலும், மகாருத்ர யாகமும் நடைபெறவுள்ளது. ஸ்ரீநடராஜா் கோ... மேலும் பார்க்க

ஸ்ரீராகவேந்திரா கல்லூரி ஆண்டு விழா

சிதம்பரம் அருகே கீழமூங்கிலடியில் உள்ள வெள்ளிவிழா காணும் ஸ்ரீராகவேந்திரா கலை, அறிவியல் கல்லூரி ஆண்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு கல்லூரித் தலைவா் டி.மணிமேகலை தலைமை வகித்து பல்வேறு போட்டிகள... மேலும் பார்க்க

பூம்புகாா் கைத்தறி ஆடைகள் கண்காட்சி தொடங்கம்

கடலூா் திருப்பாதிரிப்புலியூரில் தமிழ்நாடு கைத்தறி தொழில்கள் வளா்ச்சிக் கழகம் சாா்பில், பூம்புகாா் கைத்தறி ஆடைகள், நகைகள் கண்காட்சி, விற்பனை தொடங்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது. கடலூா் மாநகராட்சி மேயா்... மேலும் பார்க்க