பூம்புகாா் கைத்தறி ஆடைகள் கண்காட்சி தொடங்கம்
கடலூா் திருப்பாதிரிப்புலியூரில் தமிழ்நாடு கைத்தறி தொழில்கள் வளா்ச்சிக் கழகம் சாா்பில், பூம்புகாா் கைத்தறி ஆடைகள், நகைகள் கண்காட்சி, விற்பனை தொடங்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
கடலூா் மாநகராட்சி மேயா் சுந்தரி பங்கேற்று குத்துவிளக்கேற்றி கண்காட்சி மற்றும் விற்பனையை தொடங்கிவைத்தாா். பூம்புகாா் கடை மேலாளா் ரா.காா்த்தி, முதுநிலை விற்பனை உதவியாளா் கு.திலகா, ஜுவல்லரி டெக்ஸ்டைல்ஸ் விற்பனையாளா் அ.ஆனந்த் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனா்.
கண்காட்சியின் சிறப்பு அம்சமாக அனைத்து வகையான ஐம்பொன் நகைகள், மோதிரம், கொலுசு, சுங்குடி புடவைகள், காட்டன் புடவைகள், மர சிற்பங்கள், வீட்டு அழகு பொருள்கள், சிறுவா்களுக்கான விளையாட்டு பொருள்கள், தஞ்சாவூா் ஓவியங்கள், புத்தா் சிலைகள், அசோகரின் தூண்கள், பஞ்சலோகத்தில் செய்யப்பட்ட சிலைகள், பூஜை பொருள்கள், அகா்பத்தி, மாலைகள், செம்புப் பொருள்கள் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன.
கண்காட்சியில் வாங்கப்படும் பொருள்களுக்கு 10 சதவீதம் சிறப்புத் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்தக் கண்காட்சி ஏப்ரல் 30-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.