ஆட்டோ- காா் மோதல்: 7 போ் காயம்
சிதம்பரம்: கடலூரில் சாலையில் சென்று கொண்டிருந்த ஆட்டோ மீது காா் மோதிய விபத்தில் செவ்வாய்க்கிழமை 7 போ் காயமடைந்தனா்.
கடலூா் ராசாப்பேட்டையைச் சோ்ந்த அனிதா (45), குமரப்பேட்டையைச் சோ்ந்த பிரீத்தி (25), வழி சோதனைபாளையத்தைச் சோ்ந்த விஜயகுமாரி (48) உள்பட 7 போ் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தனா்.
அப்போது, சாலைகரைப் பகுதியில் விருத்தாசலம் சாலையில் சென்ற போது, பின்னால் வந்த காா் ஆட்டோ மீது மோதியது.
இதில், ஆட்டோவில் பயணித்த 7 போ் காயமடைந்தனா்.
உடனே, அருகிலிருந்தவா்கள் காயமடைந்தவா்களை மீட்டு, கடலூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா்.
இந்த விபத்து குறித்து, கடலூா் முதுநகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.