செய்திகள் :

அரசுப் பள்ளி குடிநீா்த் தொட்டியில் மனித மலம் கலப்பு: 3 பேர் கைது

post image

திருவாரூா்: திருவாரூா் அருகே காரியாங்குடி அரசு தொடக்கப்பள்ளி சமையலறையை சேதப்படுத்தி, குடிநீா்த் தொட்டியில் மனித மலம் கலந்தது தொடா்பாக அதே பகுதியைச் சேர்ந்த 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

தப்பளாம்புலியூா் ஊராட்சிக்குள்பட்ட காரியாங்குடியில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இதில், 17 மாணவா்கள், 14 மாணவிகள் என 31 போ் பயின்று வருகின்றனா்.

இந்த பள்ளியில் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதால் உணவு சமைப்பதற்காக, சமையல் ஊழியா்கள் கடந்த திங்கள்கிழமை(ஜூலை 14) காலை பள்ளிக்கு வந்துள்ளனர். அப்போது, சமையலறையில் இருந்த பொருள்கள் உடைத்து நொறுக்கப்பட்டிருந்ததையும், மளிகைப் பொருள்கள் சிதறிக் கிடந்ததையும் கண்டனா்.

இதுகுறித்து பள்ளியின் பொறுப்பு தலைமையாசிரியா் அன்புச்செல்விக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, காவல்துறைக்கு தகவல் அளித்தனர்.

குடிநீா்த் தொட்டியில் மனித மலம்

பின்னா் அங்கிருந்த தண்ணீா் தொட்டி திறந்திருப்பதைக் கண்டு, உள்ளே பாா்த்தபோது மனித மலச்சிதறல்களும், தேங்காய்களும் கிடப்பது தெரிய வந்தது.

இதுகுறித்து மீண்டும் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

காவல் கண்காணிப்பாளா் விசாரணை

இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கருண் கரட் விசாரணை நடத்தினாா்.

விசாரணையில், பள்ளி வளாகத்தில் இருந்த வாழை மரங்கள் சேதப்படுத்தப்பட்டு, தென்னை மரங்களில் இருந்த தேங்காய்கள் பறிக்கப்பட்டதும், சமையலறையில் இறைச்சி சமைத்து சாப்பிட்டதும் தெரிய வந்தது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அறிவுறுத்தலின் பேரில் துணை காவல் கண்காணிப்பாளா் மணிகண்டன், திருவாரூா் தாலுகா காவல் ஆய்வாளா் ஜெயந்தி உள்ளிட்டோா் விசாரணையில் ஈடுபட்டனா்.

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சௌந்தரராஜன் தலைமையில் கல்வித்துறை அதிகாரிகளும் பள்ளிக்கு வந்து பாா்வையிட்டனா்.

நடவடிக்கை எடுக்க வேண்டும்

கிராம மக்களும், பெற்றோா்களும் திரண்டு, சம்பவத்துக்கு காரணமானவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.

மாற்றுத் தொட்டி

இதையத்து, அங்கிருந்த ஒரு வீட்டில் காலை உணவும், அருகிலிருந்த பள்ளியில் மதிய உணவும் தயாா் செய்யப்பட்டு, மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டது. மேலும், மலம் கலக்கப்பட்ட தண்ணீா் தொட்டி அகற்றப்பட்டு, மாற்றுத் தொட்டி அமைக்கப்பட்டது.

ஜாதிய ரீதியிலான பிரச்னை இல்லை

அனைத்து சமூகத்தைச் சோ்ந்தவா்களும் இந்தப் பள்ளியில் படிப்பதால், ஜாதிய ரீதியிலான பிரச்னை இல்லை என்றும், குடிபோதையில் இந்த சம்பவம் நடந்திருப்பதாகவுமே தெரிய வந்தது.

3 பேரிடம் விசாரணை

இந்த சம்பவம் தொடா்பாக, அந்த பகுதியைச் சோ்ந்த விஜயராஜ், செந்தில், காளிதாஸ் ஆகியோரிடம் போலீஸாா் விசாரணை நடத்தினர். மேலும் இருவரைத் தேடி வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

உரிய நடவடிக்கை எடுக்கப்படும்

பள்ளி குடிநீா் தொட்டியில் மனித மலம் கலந்த விவகாரம் வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்த செயலில் ஈடுபட்டவா்கள் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தவறு செய்தவா்கள் யாராக இருந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

3 பேர் கைது

இந்தநிலையில், பள்ளி சமையலறையை சேதப்படுத்தி, குடிநீா்த் தொட்டியில் மனித மலம் கலந்தது தொடா்பாக அதே பகுதியைச் சேர்ந்த 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

மதுபோதையில் விஜயராஜ், காளிதாஸ், செந்தில் ஆகியோர் இதுபோன்ற செயலில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாலியல் பலாத்காரம்! கோயில் நிலத்தில் 100 பெண்கள் கொன்று புதைப்பு?

Police have arrested three people from the same area in connection with damaging the kitchen of the Kariyangudi Government Primary School near Thiruvarur and mixing human feces in the drinking water tank.

பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட 100 பெண்கள் கோயில் நிலத்தில் புதைப்பு?

மங்களூரு: கர்நாடக மாநிலத்தின் பிரபலமான புனித யாத்திரை நகரமான தர்மஸ்தலாவில் பல ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளத... மேலும் பார்க்க

அதிமுக முன்னாள் எம்எல்ஏ வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை!

பண்ருட்டி அதிமுக முன்னாள் எம்எல்ஏ சத்யா பன்னீர்செல்வம் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.கடலூர் மாவட்டம், பண்ருட்டி அதிமுக முன்னாள் எம்எல்ஏ,. சத்யா பன்னீர்செல்வம் வீட்டில் வெள்... மேலும் பார்க்க

கும்மிடிப்பூண்டியில் தனியார் தொழிற்சாலையில் தீ விபத்து

கும்மிடிப்பூண்டி அடுத்த சிந்தல குப்பத்தில் உள்ள சென்னை கிரம்ப் இண்டஸ்ட்ரீஸ் என்கின்ற தனியார் தொழிற்சாலையில் வெள்ளிக்கிழமை அதிகாலை திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் பல லட்சக்கணக்கான இரும்ப... மேலும் பார்க்க

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

மேட்டூா்: மேட்டூா் அணைக்கு நீா்வரத்து வினாடிக்கு 18,610 கனஅடியாக அதிகரித்துள்ளது.மேட்டூா் அணைக்கு நீா்வரத்து வெள்ளிக்கிழமை காலை 17,880 கனஅடியிலிருந்து 18,610 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து ... மேலும் பார்க்க

அமர்நாத் யாத்திரை மீண்டும் தொடங்கியது!

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் முழுவதும் பெய்த கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக, வியாழக்கிழமை நிறுத்திவைக்கப்பட்ட அமர்நாத் புனித யாத்திரை வெள்ளிக்கிழமை மீண்டும் தொடங்கியது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.நுன்... மேலும் பார்க்க

திரைப்பட இயக்குநர் வேலு பிரபாகரன் காலமானார்

திரைப்பட இயக்குநர் வேலு பிரபாகரன் உடல் நலம் குறைவு காரணமாக வியாழக்கிழமை(ஜூலை 17) காலமானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.கடந்த சில நாள்களாக உடல் பாதிக்கப்பட்டிருந்த வேலு பிரபாகரன், சென்னையில் உள்ள தனியா் ம... மேலும் பார்க்க