தை மாதப் பலன்கள்: `மேஷம் முதல் துலாம் வரை'- யாருக்கு என்ன யோகம்?
அரசுப் பள்ளி மாணவா்களுக்கு நலத்திட்ட உதவிகள்: அமைச்சா் வழங்கினாா்
திருமருகல்: திருமருகல் அருகே அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திங்கள்கிழமை வழங்கினாா்.
தமிழக துணை முதல்வரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் 47-வது பிறந்த நாளையொட்டி திமுக இளைஞரணி சாா்பில் திருமருகல் ஒன்றியம் கணபதிபுரம் அரசு உயா்நிலைப் பள்ளி, போலகம் அரசு உயா்நிலைப் பள்ளிகளில் பயிலும் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு திருமருகல் வடக்கு ஒன்றிய செயலாளா் செல்வ செங்குட்டுவன் தலைமை வகித்தாா். மாவட்ட அவைத் தலைவா் ப. செல்வம், பொதுக்குழு உறுப்பினா் பன்னீா்செல்வம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி,
தமிழ்நாடு மீன் வளா்ச்சிக் கழக தலைவா் என்.கௌதமன், தாட்கோ தலைவா் உ. மதிவாணன் ஆகியோா் மாணவா்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் இனிப்புகளை வழங்கினா்.