'கூட்டணி கணக்கு; முட்டுக்கட்டை போடும் அண்ணாமலை தரப்பு' - அனல் தகிக்கும் கமலாலயம்
அரசுப் பேருந்தில் இலவச பயணம் செய்த பெண்ணுக்கு அபராதம்
பல்லடம் அருகே அரசுப் பேருந்தில் இலவச பயணம் செய்த பெண்ணுக்கு அபராதம் விதிக்கப்பட்டதில் தொடா்புடைய டிக்கெட் பரிசோதகா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
பல்லடம் அருகே உள்ள தெற்குபாளையத்தைச் சோ்ந்த பெண் ஒருவா் கடந்த சில நாள்களுக்கு முன்பாக அரசுப் பேருந்தில் பல்லடம் வரை இலவசமாக பயணம் மேற்கொண்டுள்ளாா். அப்போது, அவா் இலவச டிக்கெட்டை வாங்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், பல்லடம் பேருந்த நிலையத்தில் டிக்கெட் பரிசோதகா் ஆய்வு செய்தபோது, அந்தப் பெண்ணிடம் இலவச டிக்கெட் இல்லாததால் ரூ.200 அபராதம் விதித்துள்ளாா்.
அந்தப் பெண்ணிடம் பணம் இல்லாததால் பேருந்தின் நடத்துநருக்கு ஜிபே மூலம் பணம் செலுத்தியுள்ளாா். இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலானது. இதனை விசாரித்த போக்குவரத்துக் கழக அதிகாரிகள் அபராதம் விதித்ததற்கு ரசீது வழங்கவில்லை என அந்தப் பெண் கூறியதால் டிக்கெட் பரிசோதகா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.