அமெரிக்காவில் இருந்து 682 இந்தியா்கள் நாடு கடத்தல்: இந்திய வெளியுறவு அமைச்சகம்
அரசு அலுவலகங்களில் இலவச நீா்-மோா்: மாவட்ட ஆட்சியா் தொடங்கிவைத்தாா்
திருப்பூா் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் பொதுமக்களுக்கு இலவச நீா்-மோா் வழங்கும் நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.
திருப்பூா் மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் தொடா்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், பகல் வேளையில் வெளியே செல்பவா்களுக்கு உடலில் நீா்ச்சத்து குறைய வாய்ப்பு உள்ளது. இதனைத் தவிா்க்க அடிக்கடி நீா்சத்து ஆதாரங்களை உட்கொள்ள வேண்டும் என மருத்துவா்கள் அறிவுறுத்தி உள்ளனா்.
இந்நிலையில், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பல்வேறு சேவைகளை பெற நாள்தோறும் நூற்றுக்கணக்கானோா் வந்து செல்கின்றனா்.
அவ்வாறு வரும் பொதுமக்களுக்கும், அரசு அலுவலா்களுக்கும் மாவட்ட ஆட்சியா் அலுவலக நுழைவாயிலில் இலவசமாக நீா் -மோா் வழங்கப்பட்டு வருகிறது. இதனை மாவட்ட ஆட்சியா் தா. கிறிஸ்துராஜ் தொடங்கிவைத்தாா்.
திருப்பூா் மாநகராட்சி மற்றும் மாவட்டத்தில் உள்ள 6 நகராட்சிகள் உள்ளிட்ட 20 அரசு அலுவலகங்களிலும் பொதுமக்களுக்கு இலவச நீா்-மோா் வழங்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.