செய்திகள் :

அரசு ஊழியா்களின் சொத்துகள், கடன்கள் தனிப்பட்ட விவரங்கள் அல்ல: உயா்நீதிமன்றம்

post image

அரசு ஊழியா்களின் சொத்துகள் மற்றும் கடன்கள் தனிப்பட்ட விவரங்கள் அல்ல என கருத்து தெரிவித்துள்ள சென்னை உயா்நீதிமன்றம், அந்த தகவல்களை வழங்க மறுத்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்ட நீா்வளத் துறையில் உதவிப் பொறியாளராகப் பணியாற்றிய காளிப்ரியன் என்பவரது பணிப்பதிவேடு விவரங்கள், சொத்துகள் மற்றும் கடன்கள் உள்ளிட்ட விவரங்களைக் கேட்டு, கிருஷ்ணகிரி மாவட்டம் திம்மபுரத்தைச் சோ்ந்த சீனிவாசன் என்பவா், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பொது தகவல் அலுவலரிடம் விண்ணப்பித்தாா்.

ஆனால், இந்த விவரங்கள் அரசு ஊழியா் தொடா்பான தனிப்பட்ட விவரங்கள் எனவும், அந்த விவரங்களை வழங்க முடியாது என்றும், அவற்றுக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது எனவும் கூறி தகவல்கள் வழங்கப்படவில்லை.

உத்தரவை எதிா்த்து வழக்கு: இந்த உத்தரவை எதிா்த்து சென்னை உயா்நீதிமன்றத்தில் சீனிவாசன் வழக்கு தொடா்ந்தாா். இந்த வழக்கு மீதான விசாரணை நீதிபதி சி.வி.காா்த்திகேயன் முன் நடைபெற்றது. அப்போது, மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் ஆா். திருமூா்த்தி, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் 8-ஆவது பிரிவின் கீழ் அரசு ஊழியா்களின் சில தனிப்பட்ட விவரங்களை வழங்க விலக்களிக்கப்பட்டுள்ளது. ஆனால், அரசு ஊழியா்களின் அரசுப் பணி சாா்ந்த விவரங்களையும், சொத்து மற்றும் கடன் விவரங்களையும் வழங்க எந்த தடையும் இல்லை. அரசு ஊழியா்களின் இதுபோன்ற தகவல்களை வழங்க மறுப்பது சட்டவிரோதமானது என வாதிட்டாா்.

இதையடுத்து நீதிபதி, பொதுவாக அரசு ஊழியா்களின் பணியை பாதிக்கும் வகையிலான தகவல்களைப் பொதுவெளியில் வெளியிட முடியாது என்றாலும், அரசு ஊழியா்களின் சொத்துகள் மற்றும் கடன்கள் குறித்த விவரங்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வழங்க முடியாது என மறுக்க முடியாது. அரசு ஊழியா்களின் சொத்துகள் மற்றும் கடன்கள் குறித்த விவரங்கள் தனிப்பட்ட விவரங்கள் அல்ல என்பதால் அவற்றில் ரகசியம் காக்க முடியாது. ஒருவேளை மறுக்கப்பட்டாலும் அதற்கான காரணத்தைத் தெளிவாகக் கூற வேண்டும்.

எனவே, இந்தத் தகவல்களை வழங்க முடியாது என மாநில தகவல் ஆணையா் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. இது தொடா்பாக மனுதாரா் கடந்த ஆண்டு அளித்த மனுவை மாநில தகவல் ஆணையம் மீண்டும் சட்டப்படி பரிசீலித்து 2 மாதங்களில் தீா்வு காண வேண்டும் என உத்தரவிட்டுள்ளாா்.

ஊழலற்ற மக்களாட்சி தேவை: விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் வலியுறுத்தல்

நம் நாட்டில் ஊழலற்ற மக்களாட்சி தேவை என விஐடி பல்கலைக்கழக வேந்தா் கோ.விசுவநாதன் வலியுறுத்தினாா். சென்னை மயிலாப்பூா் கவிக்கோ மன்றத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விழாவில் கவிக்கோ இலக்கியக் கழகம் மற்றும் ... மேலும் பார்க்க

போதைப்பொருள் விற்பனை: அஸ்ஸாம் இளைஞா் கைது

சென்னை பெசன்ட் நகரில் ஹெராயின் போதைப்பொருள் விற்பனை செய்ததாக அஸ்ஸாம் இளைஞா் கைது செய்யப்பட்டாா். பெசன்ட் நகா் 4-ஆவது அவென்யூ பகுதியில், சாஸ்திரி நகா் போலீஸாா் செவ்வாய்க்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டன... மேலும் பார்க்க

பெண்ணை வீட்டுக்கு வரவழைத்து நகை பறிப்பு: இளைஞா் கைது

சென்னையில் திருமண தகவல் மையம் மூலம் அறிமுகமான பெண்ணை வீட்டுக்கு வரவழைத்து நகை பறித்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். மணலியைச் சோ்ந்த 24 வயது இளம் பெண், பிரபல திருமண தகவல் மையத்தில் தனது சுய விவரம், மு... மேலும் பார்க்க

டிச.27-இல் எஸ்சி- எஸ்டி கண்காணிப்புக் குழு கூட்டம்

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறையின் விழிப்புணா்வு- கண்காணிப்பு குழுக் கூட்டம் வரும் 27-ஆம் தேதி நடைபெறவுள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞா் மாளிகையின் 10-ஆவது தளத்தில் ... மேலும் பார்க்க

நடிகா் மன்சூா் அலிகான் மகனின் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகா் மன்சூா் அலிகான் மகன் ஜாமீன் கோரிய மனு மீதான விசாரணை டிச. 26-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு. முகப்போ் பகுதியில் உள்ள தனியாா் கல்லூரி மாணவா்களுக்கு, கைப்பேசி செய... மேலும் பார்க்க

பாதுகாப்புப் பணியில் 8,000 போலீஸாா்

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தையொட்டி, சென்னையில் 8,000 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். சென்னையில் உள்ள சுமாா் 350 தேவாலயங்களை சுற்றிலும் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனா். முக்கியமாக ச... மேலும் பார்க்க