செய்திகள் :

அரசு கலைக் கல்லூரி ஆசிரியர்கள் மறுநியமனம் நீட்டிப்பு!

post image

தமிழ்நாடு அரசின் கல்லூரிக் கல்வி துறையின் கீழ் இயங்கும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலைக் கல்லூரி ஆசிரியர்கள் மறுநியமனம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கோவி. செழியன் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:

அரசு / அரசு உதவி பெறும் கலைக் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் ஓர் கல்வி ஆண்டின் இடையில் வயது முதிர்வின் காரணமாக ஓய்வு பெறும் நிலை எழும் பொழுது மாணவர்களின் கல்விக்கு இடையூறு ஏற்படும் என்ற காரணத்தால், அவ்வாசிரியர்களை வயது முதிர்வு மாதம் ஓய்வு பெற அனுமதித்து மீண்டும் அக்கல்வி ஆண்டின் இறுதி வரை மறுநியமனம் செய்யும் முறை
நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது.

இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்களுக்கான பாட வகுப்புகள் ஏப்ரல் முதல் வாரத்துடன் முடிவடைந்து விடுவதாலும், மே மாதத்தில் தேர்வுகள் / விடைத்தாள் திருத்தும் பணிகள் மட்டுமே நடைபெறுவதாலும், கல்வி ஆண்டின் இடையில் வயது முதிர்வின் காரணமாக ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு ஏப்ரல் மாதம் 30 ஆம் தேதி வரை மறுநியமனம் வழங்கி ஆணையிடப்பட்டது. 

இதையும் படிக்க: திருச்செந்தூர் கோயில் யானை மிதித்ததில் 2 பேர் பலி!

முதல்வர் ஸ்டாலினின் வழிகாட்டுதலின்படி, கல்லூரிக் கல்வி இயக்ககத்தின் கீழ் செயல்படும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் பயிலும் மாணாக்கர்களின் நலனை கருதிற்கொண்டு,  நிர்வாக பதவிகளான கல்லூரி கல்வி இணை இயக்குநர் / மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் / கல்லூரி முதல்வர் மற்றும் இதர கல்விசார் பணியாளர்களான கல்லூரி நூலகர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் பதவிகள், நீங்கலாக கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு சில நிபந்தனைகளுக்குள்பட்டு 2025 மே மாதம் 31 வரை மறுநியமனம் நீட்டித்து உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார்.

மார்ட்டின் லாட்டரி தொடர்புடைய இடங்களில் ரூ. 12.41 கோடி பறிமுதல்!

மார்ட்டின் லாட்டரி நிறுவனம் தொடர்புடைய 22 இடங்களில் இருந்து ரூ. 12.41 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.இது தொடர்பாக அமலாக்கத்துறை தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்திரு... மேலும் பார்க்க

அதிமுகவில் தளவாய் சுந்தரத்துக்கு மீண்டும் பொறுப்பு!

அதிமுகவில் தளவாய் சுந்தரத்துக்கு மீண்டும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார்.அதிமுகவின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையி... மேலும் பார்க்க

டிச. 3-ல் கன்னியாகுமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை!

வரும் டிச. 3 ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.நாகா்கோவில் கோட்டாறு தூயசவேரியார்ஆலயத் திருவிழாவினையொட்டி கன்னியாகுமரி மாவட்டத்துக்கு டிச. 3 ஆம் தேதி உள்ளூர் வி... மேலும் பார்க்க

நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்த்தப்படும்: ராகுல் காந்தி

நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்த்தப்படும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதல்கட்ட தேர்தல் நிறைவடைந்துள்ள ... மேலும் பார்க்க

9 தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமை: உரிமைத்தொகை ரூ. 90 லட்சம் வழங்கல்!

2024-25 ஆம் ஆண்டிற்கு 9 தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமை செய்து நூலுரிமைத்தொகையாக ரூ. 90 லட்சத்தை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார்சென்னை கலைவாணர் அரங்கில் தமிழ... மேலும் பார்க்க

கருவுற்று இருப்பதை அறிவித்த சுந்தரி தொடர் நாயகி!

சுந்தரி தொடர் நாயகி கேப்ரியல்லா, தான் கருவுற்று இருப்பதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார்.விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியில் பங்கேற்று தன்னுடைய நகைச்சுவை திறமை... மேலும் பார்க்க