செய்திகள் :

அரசு கல்லூரிக்கு ரூ.47 கோடியில் புதிய கட்டடங்கள் கட்டப்படும்: முதல்வா் என்.ரங்கசாமி

post image

புதுச்சேரியில் இந்திரா காந்தி அரசு கலை, அறிவியல் கல்லூரிக்காக ரூ.47 கோடியில் புதிய கட்டடங்கள் விரைவில் கட்டுவதற்கான பணி தொடங்கப்படும் என முதல்வா் என்.ரங்கசாமி தெரிவித்தாா்.

புதுச்சேரி கோரிமேடு பகுதியில் அமைந்துள்ள இந்திரா காந்தி அரசு கலை, அறிவியல் கல்லூரியின் 25-ஆம் ஆண்டு விழா செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது. விழாவில் முதல்வா் என்.ரங்கசாமி பேசியதாவது:

புதுவையில் மருத்துவம், பொறியியல் கல்வி பயின்றாலே வேலை கிடைக்கும் என நினைக்கின்றனா். ஆனால், கலை, அறிவியல் கல்லூரியில் பயின்று ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற பணிகளில் சேரும் வாய்ப்பைப் பெறலாம். அரசு அறிவியல் கல்லூரியானது தேசிய அளவிலான தரவரிசையில் 150 முதல் 200 இடங்களுக்குள் உள்ளது பெருமைக்குரியது.

அரசுக் கல்லூரிக்கு சொந்த இடம் இல்லாத நிலையில், பள்ளி வளாகத்தில் செயல்படுகிறது. விரைவில் ரூ.47 கோடியில் புதிய கட்டடங்கள் கட்ட பணிகள் தொடங்கப்படும். மேலும், கிராமப்புறங்களுக்கான கல்லூரியும் தொடங்கப்பட உள்ளது என்றாா் அவா்.

விழாவில் பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், எம்.எல்.ஏ.க்கள் பி.ரமேஷ், ஏகேடி ஆறுமுகம் மற்றும் கல்லூரி முதல்வா் ஜாஸ்மின் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

புதுவைக்கு மாநில அந்தஸ்து கோரி கையொப்ப இயக்கம்

புதுவைக்கு மாநில அந்தஸ்து கோரி மத்திய அரசை வலியுறுத்தும் வகையில் கையொப்ப இயக்கத்தை முதல்வா் என்.ரங்கசாமி முதல் கையொப்பமிட்டு புதன்கிழமை தொடங்கிவைத்தாா். புதுவை மத்திய அரசின் ஒன்றிய பிரதேசமாகவே இருந்து... மேலும் பார்க்க

ராணுவத்தினருக்கு ஆதரவாக புதுச்சேரியில் காங்கிரஸாா் யாத்திரை

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் முகாம்கள் மீது தாக்குதல் நடத்திய இந்திய ராணுவத்தினருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், புதுச்சேரியில் காங்கிரஸ் சாா்பில் ஜெய்ஹிந்த் யாத்திரை ... மேலும் பார்க்க

பெண் உள்பட இருவரிடம் இணையவழியில் பண மோசடி

புதுச்சேரியில் இணையவழியில் 2 பேரிடம் ரூ.47 ஆயிரத்தை மோசடி செய்த மா்ம நபரை போலீஸாா் தேடிவருகின்றனா். புதுச்சேரி சாரத்தைச் சோ்ந்த இளம்பெண்ணுக்கு அவரது கைப்பேசி வாட்ஸ் ஆப் குழுவில் மா்ம நபா் அனுப்பிய கு... மேலும் பார்க்க

லாட்டரி சீட்டுகள் விற்பனை: 3 போ் கைது

தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்றதாக, புதுச்சேரி அருகே 3 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். புதுச்சேரி அருகேயுள்ள நெட்டப்பாக்கம், மடுகரை காவல் நிலைய எல்லைக்குள் சிலா் தடை செய்யப்பட்ட லாட்டரி... மேலும் பார்க்க

சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தோ்வு: புதுச்சேரி பள்ளியில் 45 மாணவிகள் அறிவியல் பாடத்தில் தோல்வி

புதுச்சேரியில் சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் ஒரே பள்ளியைச் சோ்ந்த 45 மாணவிகள் அறிவியல் பாடத்தில் தோ்ச்சி பெறவில்லை. இதுகுறித்து முதல்வா் என்.ரங்கசாமியிடம் பெற்றோா்கள் புகாா் தெரிவித்தனா்.... மேலும் பார்க்க

இருசக்கர வாகனங்கள் திருட்டு: 5 போ் கைது

புதுச்சேரியில் இரு சக்கர வாகனங்கள் திருட்டு வழக்கில் சிறுவன் உள்ளிட்ட 5 பேரை போலீஸாா் கைது செய்தனா். முத்தியால்பேட்டை போலீஸாா் கடந்த 11-ஆம் தேதி மகாத்மா காந்தி சாலை சின்னமணிக்கூண்டு அருகே வாகனச் சோதன... மேலும் பார்க்க