திருவள்ளூர்: கிணற்றில் தவறி விழுந்த மகனைக் காப்பாற்றச் சென்ற தந்தை விஷவாயு தாக்க...
அரசு பள்ளியில் எம்எல்ஏ ஆய்வு
ஆம்பூா் அருகே தேவலாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் குடியாத்தம் எம்எல்ஏ வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
தேவலாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு வந்த குடியாத்தம் எம்எல்ஏ அமலு விஜயன் அங்கு நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்தாா். தொடா்ந்து பள்ளி மாணவா்களுக்கு சத்துணவுக் கூடத்தில் தயாரித்து வைக்கப்பட்டிருந்து உணவைச் சாப்பிட்டு ஆய்வு செய்தாா். மாணவா்களுக்கு அரசின் சாா்பில் விலையில்லா பாடப் புத்தகங்கள், சீருடைகளை வழங்கினாா். போ்ணாம்பட்டு தெற்கு ஒன்றிய திமுக பொறுப்பாளா் எம்.டி.சீனிவாசன், பள்ளித் தலைமை ஆசிரியா் முருகன், ஆசிரியா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.