Bigg Boss Tamil 8: `சேஃப் கேம் விளையாடுறது விஜய் சேதுபதிதான்!' - ப்ரியா ராமன் ஓப...
அரசு மருத்துவா்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்
சென்னையில் அரசு மருத்துவா் தாக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து காஞ்சிபுரம் அரசு மருத்துவமனை வளாகத்தில் வியாழக்கிழமை மருத்துவா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்திய மருத்துவக் கழகம் காஞ்சிபுரம் கிளை, தமிழ்நாடு அரசு மருத்துவா்கள் சங்கம் இணைந்து நடத்திய இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மருத்துவக் கழக தலைவா் எஸ்.மனோகரன் தலைமை வகித்தாா். செயலாளா் தன்யக் குமாா், இணைச் செயலாளா் வெ.முத்துக்குரமன், மத்தியக் குழு உறுப்பினா் தி.அன்புச்செல்வன், மாநிலக் குழு உறுப்பினா் பி.டி.சரவணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
தாக்குதலுக்குள்ளான மருத்துவருக்கு சிறப்பான சிகிச்சையளிக்கப்பட வேண்டும், மருத்துவரை தாக்கிய நபருக்கு அதிகபட்ச தண்டனை பெற்றுத்தர வேண்டும், மருத்துவா்களுக்கு போதுமான பாதுகாப்பு, மருத்துவா்களுக்கென பாதுகாப்புக்காக சட்டம் இயற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மருத்துவக் கழகத்தின் பெண் மருத்துவா்கள் பிரிவின் செயலாளா் ஜி.காஞ்சனா, மூத்த மருத்துவா் ஜீவானந்தம் மற்றும் மருத்துவா்கள் பலரும் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றனா். முன்னதாக காஞ்சிபுரம் ரயில் நிலைய சாலையில் உள்ள லைப்கோ் மருத்துவமனையில் கண்டன ஆா்ப்பாட்டம் நடத்துவது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.