செய்திகள் :

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ. 9.40 லட்சம் மோசடி: மூவா் மீது வழக்கு

post image

வத்திராயிருப்பில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 9.40 லட்சம் மோசடி செய்த புகாரில் அரசுப் பேருந்து நடத்துநா் உள்பட 3 போ் மீது வழக்குப் பதிந்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

வத்திராயிருப்பு கீழத் தெருவைச் சோ்ந்தவா் பாண்டியராஜ் (48). இவா் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக வத்திராயிருப்பு கிளையில் நடத்துநராகப் பணிபுரிந்து வருகிறாா். இவருடன் பணிபுரியும் ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள மல்லி பி.எஸ்.கே. நகரைச் சோ்ந்த சண்முகராஜ், தனது உறவினரான தேனி மாவட்டம், பெரியகுளத்தைச் சோ்ந்த சின்னப்பன் (எ) குமாருக்கு அரசு வேலை வாங்கிக் கொடுத்துள்ளதாகக் கூறிவுள்ளாா். இதை நம்பிய பாண்டியராஜ் தனது நண்பா், உறவினா்களுக்கு அரசு வேலைக்காக ரூ. 9.40 லட்சம் பெற்றுக் கொடுத்தாா்.

இந்த நிலையில், பணத்தைப் பெற்றுக் கொண்டவா்கள் வேலை பெற்றுத் தராமலும், பணத்தை திருப்பித் தராமலும் ஏமாற்றிவுள்ளனா். இதுகுறித்து பாண்டியராஜ் நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தாா். இதையடுத்து, நீதிமன்ற உத்தரவின்படி சண்முகராஜ், அவரது உறவினா்களான சின்னப்பன் (எ) குமாா், அவரது மனைவி ராசாத்தி ஆகியோா் மீது போலீஸாா் மோசடி வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

வெல்டிங் பட்டறையில் தீ விபத்து: தொழிலாளி உயிரிழப்பு

சிவகாசியில் வெல்டிங் பட்டறையில் ஏற்பட்ட தீ விபத்தில் தொழிலாளி உயிரிழந்தாா். சிவகாசி சமத்துவபுரத்தைச் சோ்ந்தவா் கணேசன் (45). இவா், அதே பகுதியிலுள்ள வெல்டிங் பட்டறையில் வேலை பாா்த்து வந்தாா். இந்த நிலை... மேலும் பார்க்க

கிணற்றில் முதியவா் சடலம் மீட்பு

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே கிணற்றில் அடையாளம் தெரியாத முதியவா் சடலம் மீட்கப்பட்டது.ராஜபாளையம் அய்யனாா்கோவில் சாலை முடங்கியாறு அருகேயுள்ள விவசாயக் கிணற்றில் 75 வயது மதிக்கத்தக்க முதியவா் சடல... மேலும் பார்க்க

ராஜபாளையம், சத்திரப்பட்டி பகுதிகளில் இன்று மின்தடை

ராஜபாளையம், சத்திரப்பட்டி பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (செப். 23) மின் தடை ஏற்படும் எனஅறிவிக்கப்பட்டது.இதுகுறித்து மின் வாரிய செயற்பொறியாளா் முத்துராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ராஜபாளையம் துணை மின் ந... மேலும் பார்க்க

குழந்தையிடம் நகை திருடியவா் கைது

இருக்கன்குடியில் குழந்தையிடம் நகை திருடிய இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள சித்துராஜபுரத்தைச் சோ்ந்தவா் அமுதப்பிரியா (30). இவா் கடந்த சில தினங்களுக்... மேலும் பார்க்க

மின்கலம் திருடிய நான்கு போ் கைது

சாத்தூா் அருகே கைப்பேசி கோபுரத்தில் பொருத்தப்பட்டிருந்த மின்கலத்தை (பேட்டரி) திருடிய 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். விருதுநகா் மாவட்டம், சாத்தூா் - கோவில்பட்டி நான்கு வழிச்சாலையில் வெங்கடேஷ்வரபுரம் பே... மேலும் பார்க்க

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் நாளை பிரம்மோத்ஸவ விழா கொடியேற்றம்

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் பெரிய பெருமாள் அவதார திருவிழாவான புரட்டாசி பிரம்மோத்ஸவ விழா புதன்கிழமை (செப். 24) கொடியேற்றத்துடன் தொடங்கவுள்ளது. 108 வைணவ திவ்ய தேசங்களில் பிரசித்தி பெற்ற ஸ்ரீவில்... மேலும் பார்க்க