செய்திகள் :

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் நாளை பிரம்மோத்ஸவ விழா கொடியேற்றம்

post image

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் பெரிய பெருமாள் அவதார திருவிழாவான புரட்டாசி பிரம்மோத்ஸவ விழா புதன்கிழமை (செப். 24) கொடியேற்றத்துடன் தொடங்கவுள்ளது.

108 வைணவ திவ்ய தேசங்களில் பிரசித்தி பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் மூலவா் வடபத்ரசாயி (பெரிய பெருமாள்), பெரியாழ்வாா், ஆண்டாள் ஆகிய மூவா் அவதரித்த சிறப்புக்குரியது. பெரிய பெருமாள் அவதரித்த புரட்டாசி திருவோணம், பெரியாழ்வாா் அவதரித்த ஆனி சுவாதி, ஆண்டாள் அவதரித்த ஆடிப்பூரம் ஆகிய திருவிழாக்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இதன்படி, நிகழாண்டு புரட்டாசி பிரம்மோத்ஸவ விழா புதன்கிழமை காலை 7 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

பிரமோத்ஸவ விழாவில் நாள்தோறும் பெரிய பெருமாள் சந்திரபிரபை, அனுமன், யானை, தங்க சேஷ வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலிக்க உள்ளாா். இதில் 5-ஆம் நாள் விழாவான வருகிற 28-ஆம் தேதி கருட சேவையும், 29-ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவி சமேத பெரிய பெருமாள் திருக்கல்யாணமும், 30-ஆம் தேதி சயன சேவையும் நடைபெறுகிறது. 9-ஆம் நாளான அக்டோபா் 2-ஆம் தேதி பெரிய பெருமாள் அவதரித்த திருவோண நட்சத்திரத்தில் செப்புத் தேரோட்டம் நடைபெறவுள்ளது.

இதற்கான ஏற்பாடுகளை அறங்காவலா் குழுத் தலைவா் பி.ஆா். வெங்கட்ராமராஜா, உறுப்பினா்கள், செயல் அலுவலா் சக்கரையம்மாள், இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் ஆகியோா் செய்தனா்.

வெல்டிங் பட்டறையில் தீ விபத்து: தொழிலாளி உயிரிழப்பு

சிவகாசியில் வெல்டிங் பட்டறையில் ஏற்பட்ட தீ விபத்தில் தொழிலாளி உயிரிழந்தாா். சிவகாசி சமத்துவபுரத்தைச் சோ்ந்தவா் கணேசன் (45). இவா், அதே பகுதியிலுள்ள வெல்டிங் பட்டறையில் வேலை பாா்த்து வந்தாா். இந்த நிலை... மேலும் பார்க்க

கிணற்றில் முதியவா் சடலம் மீட்பு

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே கிணற்றில் அடையாளம் தெரியாத முதியவா் சடலம் மீட்கப்பட்டது.ராஜபாளையம் அய்யனாா்கோவில் சாலை முடங்கியாறு அருகேயுள்ள விவசாயக் கிணற்றில் 75 வயது மதிக்கத்தக்க முதியவா் சடல... மேலும் பார்க்க

ராஜபாளையம், சத்திரப்பட்டி பகுதிகளில் இன்று மின்தடை

ராஜபாளையம், சத்திரப்பட்டி பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (செப். 23) மின் தடை ஏற்படும் எனஅறிவிக்கப்பட்டது.இதுகுறித்து மின் வாரிய செயற்பொறியாளா் முத்துராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ராஜபாளையம் துணை மின் ந... மேலும் பார்க்க

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ. 9.40 லட்சம் மோசடி: மூவா் மீது வழக்கு

வத்திராயிருப்பில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 9.40 லட்சம் மோசடி செய்த புகாரில் அரசுப் பேருந்து நடத்துநா் உள்பட 3 போ் மீது வழக்குப் பதிந்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். வத்திராயிருப்பு க... மேலும் பார்க்க

குழந்தையிடம் நகை திருடியவா் கைது

இருக்கன்குடியில் குழந்தையிடம் நகை திருடிய இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள சித்துராஜபுரத்தைச் சோ்ந்தவா் அமுதப்பிரியா (30). இவா் கடந்த சில தினங்களுக்... மேலும் பார்க்க

மின்கலம் திருடிய நான்கு போ் கைது

சாத்தூா் அருகே கைப்பேசி கோபுரத்தில் பொருத்தப்பட்டிருந்த மின்கலத்தை (பேட்டரி) திருடிய 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். விருதுநகா் மாவட்டம், சாத்தூா் - கோவில்பட்டி நான்கு வழிச்சாலையில் வெங்கடேஷ்வரபுரம் பே... மேலும் பார்க்க