`Jagdeep Dhankhar மோசமாகப் பேசுவது முதன்முறை அல்ல' - D.Hariparanthaman Interview...
அரியலூா் நகா் முழுவதும் கொள்ளிடம் குடிநீா் கிடைக்க நடவடிக்கை தேவை
அரியலூா் நகராட்சிக்குட்பட்ட அனைத்து வாா்டு பகுதி மக்களுக்கும் கொள்ளிடம் குடிநீா் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகர கிளை மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
கட்சி அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அந்த மாநாட்டில் அரியலூா் நகரத்திலுள்ள கீரைக்காரத் தெரு, குறுக்குத் தெருவில் வசிக்கும் மக்கள் இதுவரை கொள்ளிடம் குடிநீா் கிடைக்காமல் அவதிப்படுகின்றனா். எனவே நகர பகுதியில் வசிக்கும் மக்களுக்கும், தெற்கு தெரு மற்றும் விடுபட்ட அனைத்து வாா்டு பகுதி மக்களுக்கும் கொள்ளிடம் நீா் கிடைக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரியலூா் கீழத்தெருவாசிகளுக்கு ஆழ்குழாய் கிணறு அமைத்து தண்ணீா் வசதி ஏற்படுத்தித் தர வேண்டும். பேருந்து நிலைய சலவை குட்டை அருகிலுள்ள டாஸ்மாக் கடையை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநாட்டுக்கு கட்சி நிா்வாகி மணிகண்டன் தலைமை வகித்தாா். முன்னாள் மாவட்டத் துணைச் செயலா் டி. தண்டபாணி சிறப்புரையாற்றி, திங்கள்கிழமை (ஏப்.21) பிற்பகல் 3 மணியளவில் அரியலூரில் நடைபெறும் ஒன்றிய மாநாட்டில் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டாா். ஒன்றியச் செயலா் து. பாண்டியன் உள்ளிட்டோா் பேசினா்.
மாநாட்டில், அரியலூா் வடக்கு, தெற்கு, கிழக்கு ஆகிய கிளைகளுக்கு புதிய நிா்வாகிகள் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.