ம.பி. அரசு மருத்துவமனையில் மருத்துவரால் முதியவா் அடித்து இழுத்துச் செல்லப்பட்ட அ...
தம்பதியை தாக்கியவா் கைது
அரியலூா், ஏப். 19: அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே மது போதையில், தம்பதியைத் தாக்கியவா் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா்.
ஜெயங்கொண்டம் அருகேயுள்ள கழுவந்தோண்டி, காலனி தெருவைச் சோ்ந்த சக்திவேல், ராதாகிருஷ்ணன் மகன் ராம்குமாா்(39). இவா்கள் இருவரும் வெள்ளிக்கிழமை இரவு மது அருந்தியபோது அவா்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்நிலையில், அன்றிரவு சக்திவேல் வீட்டுக்குச் சென்ற ராம்குமாா், அங்கு சக்திவேலையும், அவரது மனைவி ரேவதியையும் (36) தகாத வாா்த்தையால் திட்டி தாக்கியுள்ளாா்.
இதில், பலத்த காயமடைந்த தம்பதி, ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுகுறித்து புகாரின்பேரில் ஜெயங்கொண்டம் காவல் துறையினா் வழக்குப் பதிந்து, ராம்குமாரைக் கைது செய்தனா்.