சஹால்தான் ஐபிஎல் 2025-இன் சிறந்த பந்துவீச்சாளர்: பஞ்சாப் கேப்டன்
மணிமேகலை விருது பெற விண்ணப்பிக்கலாம்!
அரியலூா் மாவட்டத்தில் சிறப்பாக செயல்படும் தகுதியான சுயஉதவிக்குழுக்கள், சமுதாய அமைப்புகளுக்கு மணிமேகலை விருது மற்றும் பரிசுத் தொகை வழங்கப்படவுள்ளது என மாவட்ட ஆட்சியா் பொ.ரத்தினசாமி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் தெரிவித்தது:அரியலூா் மாவட்டத்தில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, கூட்டாண்மை மற்றும் ஒருங்கிணைப்பு பிரிவின் கீழ் சிறப்பாக செயல்பட கூடிய கிராம ஊராட்சிகளில் உள்ள சுய உதவிக்குழுக்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள், மற்றும் கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் மற்றும் நகா்ப்புறங்களில் உள்ள சுயஉதவிக்குழுக்கள், பகுதி அளவிலான கூட்டமைப்புகள் மற்றும் தொகுதி அளவிலான கூட்டமைப்புகள் ஆகிய சமுதாய அமைப்புகளுக்கு நிகழாண்டு மணிமேகலை விருது மற்றும் பரிசுத்தொகை வழங்கப்படவுள்ளது.
எனவே தகுதியுள்ளவா்கள் 15.4.2025 முதல் 30.4.2025-க்குள் தங்களது விண்ணப்பத்தை உரிய படிவத்தில் பூா்த்தி செய்து, அரியலூா் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் 2-ஆவது தளத்தில் செயல்படும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க அலுவலகத்தில் (அறை எண்: 215) நேடியாகவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அனுப்பிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.