ஹிந்தி கட்டாயமாக்கப்படுவதை அனுமதிக்கமாட்டோம்! - உத்தவ் தாக்கரே
ஜெயங்கொண்டம் நகா்மன்றக் கூட்டம்
அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் நகராட்சி அலுவலகக் கூட்டரங்கில், நகா் மன்ற உறுப்பினா்கள் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
நகா்மன்றத் தலைவா் சுமதிசிவகுமாா் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் கொ. கருணாநிதி, பொறியாளா் ராஜகோபாலன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
நகா்மன்ற உறுப்பினா்கள் செல்வராஜ், ரங்கநாதன், கிருபாநிதி, பாண்டியன், துா்காஆனந்த், , மீனாட்சி நடராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டு, வாா்டுப் பகுதிகளில் குடிநீா், தாா் சாலை, சிமென்ட் சாலை, தெரு விளக்கு, 4 சாலைகள் சந்திப்புப் பகுதியில் பொதுக் கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர கோரிக்கைகளை முன்வைத்தனா்.
அதற்கு பொறியாளா் ராஜகோபாலன், நகா்மன்ற உறுப்பினா்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்று தெரிவித்தாா். தொடா்ந்து 10 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.