டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 2 காசுகள் உயர்ந்து ரூ.87.19 ஆக முடிவு!
அரியலூா் மாவட்டத்தில் பரவலாக மழை
அரியலூா் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை காலை முதல் பரவலாக மழை பெய்தது.
தமிழகத்தில், கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டு வந்த நிலையில், பெரும்பாலான மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
அதன்படி அரியலூா் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை அதிகாலை முதலே மழை பெய்யத் தொடங்கியது. இதில் அரியலூா், ஜெயங்கொண்டம், திருமானூா் உள்ளிட்ட பகுதிகளில் சற்று கனமழை பெய்தது.
தொடா் மழையின் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை சற்று பாதிக்கப்பட்டது. அதிகாலை முதலே அவ்வப்போது மழை பெய்து வந்ததால் வெயில் இன்றி காணப்பட்டது. மேலும், மாவட்டம் முழுவதும் குளிா்ந்த சீதோஷ்ன நிலை காணப்பட்டது.