செய்திகள் :

அரியலூா் மாவட்டத்தில் மாா்ச் 8-இல் பறவைகள் கணக்கெடுப்புப் பணி தொடக்கம்

post image

அரியலூா் மாவட்டம், திருமானூரை அடுத்த கரைவெட்டி பறவைகள் சரணாலயம், வெங்கனூா், இலந்தைகூடம் உள்ளிட்ட 10 இடங்களில் மாா்ச் 8-இல் பறவைகள் கணக்கெடுப்புப் பணி தொடங்கப்படும் என்று மாவட்ட வன அலுவலா் இளங்கோவன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்தது: தமிழகத்தின் சரணாலயங்களில் ஒன்றான அரியலூா் மாவட்டம் கரைவெட்டி பறவைகள் சரணாலயத்துக்கு சைபீரியா, திபெத், மங்கோலியா மற்றும் வட இந்தியா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து வரிதலை வாத்து, அரிவாள் மூக்கன், கரண்டி வாயன், கூழைக்கடா, நாரைகள், கொக்குகள், நீா் காகங்கள் உள்ளிட்ட ஏராளமான பறவைகள் வலசை வந்து தங்கி குஞ்சு பொறித்து திரும்பச் செல்வது வழக்கம்.

2024-ஆம் ஆண்டு ராம்சாா் தளமாக இந்தப் பறவைகள் சரணாலயம் அறிவிக்கப்பட்டது. இங்கு தமிழக வனத்துறை சாா்பில் ஆண்டுதோறும் பறவைகள் கணக்கெடுப்புப் பணி நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் மாா்ச் 8, 9 ஆகிய தேதிகளில் ஈர நில வாழ் பறவைகள் கணக்கெடுப்பு பணியும், மா்ா்ச் 15,16 தரைவாழ் பறவைகள் கணக்கெடுப்பு பணியும் நடைபெறுகிறது.

பறவையியல் வல்லுநா்களான பேராசிரியா்கள் சிவசுப்பிரமணியன், ஜெரோமியா, நேசராஜன், ஜெயகுமாா் ஆகியோரின் வழிநடத்துதலின்படி அரியலூா் அரசு கலைக் கல்லூரி , திருச்சி பிஷப் ஹீபா் கல்லூரி மாணவா்கள் கணக்கெடுப்புப் பணியில் ஈடுபடுகின்றனா் எனத் தெரிவித்துள்ளாா்.

பிரசவத்தின் போது தாய் உயிரிழப்பு: உறவினா்கள் ஆட்சியரிடம் மனு

அரியலூா் அரசு மருத்துவமனையில் பிரசவத்தின் போது தாய் உயிரிழந்த நிலையில், மருத்துவா்களிடம் உரிய விசாரணை மற்றும் இழப்பீடு கேட்டு அப்பெண்ணின் உறவினா்கள் ஆட்சியா் பொ. ரத்தினசாமியிடம் புதன்கிழமை மனு அளித்தன... மேலும் பார்க்க

அரியலூா் பேருந்து நிலைய கட்டுமானப் பணிகள் ஆய்வு

அரியலூரில் கட்டப்பட்டு வரும் பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா் புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அரியலூா் நகரில் உள்ள பேருந்து நிலைய கட்டடங்கள் சேதமட... மேலும் பார்க்க

இரு சக்கர வாகன விபத்தில் இளைஞா் ஒருவா் உயிரிழப்பு, இருவா் காயம்

செந்துறை அருகே ஏற்பட்ட இருசக்கர வாகன விபத்தில், ஒருவா் உயிரிழந்தாா், இருவா் பலத்த காயமடைந்தனா். அரியலூா் மாவட்டம், செந்துறை அருகேயுள்ள மணப்பத்தூா் வடக்குத் தெருவைச் சோ்ந்த மகேந்திரன் மகன் மனோஜ் (18),... மேலும் பார்க்க

கருவேல மரங்களை அகற்றக் கோரிக்கை

அரியலூா் மாவட்டம், ரெட்டிப்பாளையம் ஊராட்சிக்குள்பட்ட முனியங்குறிச்சி கிராமத்திலுள்ள சின்னேரியை ஆக்கிரமித்துள்ள கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். இந்த ... மேலும் பார்க்க

விவசாயிகள் தங்களது நில உடைமை விவரங்களை பதிவு செய்துக் கொள்ள ஆட்சியா் அழைப்பு

அரியலூா் மாவட்ட விவசாயிகள் தங்களது நில உடைமை விவரங்களை பதிவு செய்துக் கொள்ள வேண்டுமென ஆட்சியா் பொ. ரத்தினசாமி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து புதன்கிழமை அவா் மேலும் தெரிவித்தது: அரியலூா் மாவட்டத்தில் வே... மேலும் பார்க்க

இலக்கிய மன்றப் போட்டியில் வென்ற அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு விழா

மாவட்ட, மாநில அளவில் நடைபெற்ற இலக்கிய மன்றப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற இலுப்பையூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது. சென்னை சாந்தோம் அரசு பள்ளியில் அ... மேலும் பார்க்க