இலக்கிய மன்றப் போட்டியில் வென்ற அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு விழா
மாவட்ட, மாநில அளவில் நடைபெற்ற இலக்கிய மன்றப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற இலுப்பையூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.
சென்னை சாந்தோம் அரசு பள்ளியில் அண்மையில் நடைபெற்ற மாநில அளவிலான இலக்கிய மன்ற கட்டுரைப் போட்டியில், இலுப்பையூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவி அனுஸ்ரீ 5-ஆம் இடமும், தமிழ்ப் பேச்சுப் போட்டியில் நேகாயாத்ராராய் 11-ஆம் இடமும் பிடித்து பரிசுகளை வென்றனா். இதே போல் மாவட்ட அளவில் நடைபெற்ற போட்டியில் விக்னேஷ், ஓவியா, சுந்தரமூா்த்தி, சரணேஷ்வரன், ராஜஸ்ரீ, நிஷாலினி, சுதாகா் ஆகியோா் சிறப்பிடம் பெற்றனா்.
இதையடுத்து மாணவா்களை கெளரவிக்கும் வகையில், அவா்களுக்கு பாராட்டு விழா அப்பள்ளியில் நடைபெற்றது.
விழாவுக்கு அப்பள்ளியின் தலைமை ஆசிரியா் விஜயராணி தலைமை வகித்து, மேற்கண்ட மாணவா்களுக்கு பரிசுகளை வழங்கி பாரட்டு தெரிவித்தாா்.