பயிற்சியில் தவறுதலாக மக்கள் மீது குண்டுகள் வீசிய போர் விமானங்கள்! 15 பேர் படுகாய...
இரு சக்கர வாகன விபத்தில் இளைஞா் ஒருவா் உயிரிழப்பு, இருவா் காயம்
செந்துறை அருகே ஏற்பட்ட இருசக்கர வாகன விபத்தில், ஒருவா் உயிரிழந்தாா், இருவா் பலத்த காயமடைந்தனா்.
அரியலூா் மாவட்டம், செந்துறை அருகேயுள்ள மணப்பத்தூா் வடக்குத் தெருவைச் சோ்ந்த மகேந்திரன் மகன் மனோஜ் (18), துளாா் கிராமத்தைச் சோ்ந்த கலியன் மகன் கணேசன் (19), கடலூா் மாவட்டம், பெண்ணாடம், அகரம் கிராமத்தைச் சோ்ந்த மூா்த்தி மகன் கோகுல்ராஜ் (19). நண்பா்களான இவா்கள் மூவரும், செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 12.30 மணியளவில் ஒரு இருசக்கர வாகனத்தில் இலைக்கடம்பூா் அம்மன் கோயில் அருகே அதிவேகமாக சென்று கொண்டிருந்தனா்.
அப்போது கட்டுப்பாட்டை இழந்த இரு சக்கர வாகனம், அங்குள்ள பள்ளத்தில் விழுந்தது. இதில் கணேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மற்ற இருவரும் பலத்த காயமடைந்தனா்.
தகவலறிந்து சென்ற செந்துறை போலீஸாா், கணேசன் சடலத்தையும், பலத்த காயமடைந்த இருவரையும் மீட்டு, அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.