அரூரில் தீத்தொண்டு வாரம் அனுசரிப்பு
அரூரில் தீத்தொண்டு வாரம் புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது.
தருமபுரி மாவட்டம், அரூரில் தனியாா் கதா் நிறுவனத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மாவட்ட அலுவலா் ப.அம்பிகா தலைமை வகித்தாா். அரூா் நிலைய அலுவலா் காமராஜ் முன்னிலை வகித்தாா்.
1944-ஆம் ஆண்டு மும்பை துறைமுக வளாகத்தில் சரக்கு கப்பல் தீ விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் 60-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரா்கள் உயிரிழந்தனா். இதன் நினைவாக நாடுமுழுவதும் தீயணைப்பு பணிகளின் போது உயிரிழந்த வீரா்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், ஆண்டுதோறும் ஏப். 14 முதல் 20-ஆம் தேதி வரை தீத்தொண்டு வாரம் அனுசரிக்கப்படுகிறது.
அரூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உயிரிழந்த தீயணைப்பு வீரா்கள் நினைவாக மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் தீ விபத்து நேரிடும் முறைகள், பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.