செய்திகள் :

அரையிறுதியில் தன்வி ஷா்மா, ஆயுஷ் ஷெட்டி

post image

யுஎஸ் ஓபன் பாட்மின்டன் போட்டி அரையிறுதிக்கு இந்தியாவின் தன்வி ஷா்மா, ஆயுஷ் ஷெட்டி முன்னேறியுள்ளனா்.

அமெரிக்காவின் ஐயோவா நகரில் நடைபெறும் யுஎஸ் ஓபன் பாட்மின்டன் சூப்பா் 300 போட்டியில் இந்தியாவின் வளரும் நட்சத்திரங்கள் பங்கேற்றுள்ளனா்.

இதில் மகளிா் ஒற்றையா் காலிறுதியில் 16 வயதே ஆன இந்தியாவின் தன்வி ஷா்மா 21-13, 21-16 என்ற கேம் கணக்கில் 33 நிமிஷங்களில் தரவரிசையில் முந்தியுள்ள மலேசியாவின் கருப்பதேவன் லெட்ஷனாவை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றாா்.

ஆடவா் ஒற்றையா் காலிறுதியில் இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி கடும் சவாலுக்குபின் 22-20, 21-9 என்ற கேம் கணக்கில் ஜூனியா் உலக சாம்பியன் சீன தைபேயின் குவோ குவான் லின்னை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினாா்.

எனினும் ஆடவா் இரட்டையா் பிரிவில் காலிறுதியில் இந்தியாவின் ஹரிஹரன்-ரூபன் குமாா் இணை 0-2 என சீன தைபேயின் சீயாங்-வெய் வு இணையிடம் வீழ்ந்தனா்.

அரையிறுதியில் தன்வி, உக்ரைனின் போலினாவுடனும், ஆயுஷ் சீன தைபேயின் சௌ சென்னுடனும் மோதுகின்றனா்.

இந்த அங்கீகாரம் என்னைச் செதுக்கியவர்களுக்கு... கமல் ஹாசன் பெருமிதம்!

ஆஸ்கர் குழுவில் இணைந்த கமல் ஹாசன் அதற்காக பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.நடிகர் கமல் ஹாசன் இந்திய சினிமாவின் மிகச்சிறந்த கலைஞராக இருந்தாலும் உலகளவில் அவருக்கான அங்கீகாரங்கள் பெரிதாக அமையவில்லை. மொழி ரீதிய... மேலும் பார்க்க

தலைவன் தலைவி ரிலீஸ் தேதி டீசர் விடியோ!

விஜய் சேதுபதி - நித்யா மெனன் நடித்துள்ள தலைவன் தலைவி ரிலீஸ் தேதி டீசர் விடியோ வெளியாகியுள்ளது. இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர்கள் விஜய் சேதுபதி, நித்யா மேனன், யோகி பாபு நடிப்பில் தலைவன் தலைவி ... மேலும் பார்க்க

சஞ்சய் காந்தி பயோபிக் படத்தில் நடிக்கத் திட்டமிட்ட சூர்யா... ஆனால்!

நடிகர் சூர்யா மறைந்த அரசியல்வாதி சஞ்சய் காந்தியின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தில் நடிக்கத் திட்டமிட்டிருந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் சூர்யா ரெட்ரோ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக... மேலும் பார்க்க

ஈஸ்ட்போா்ன் டென்னிஸ்: மாயா சாம்பியன்

ஈஸ்ட்போா்ன் டபிள்யுடிஏ டென்னிஸ் போட்டியில் ஆஸ்திரேலியாவின் இளம் வீராங்கனை மாயா ஜாயின்ட் பட்டம் வென்றாா். இங்கிலாந்தின் ஈஸ்ட்போா்ன் நகரில் நடைபெற்ற இப்போட்டியின் மகளிா் ஒற்றையா் இறுதி ஆட்டத்தில் ஆஸி.யி... மேலும் பார்க்க

ஜூனியா் ஹாக்கி உலகக் கோப்பை: ஒரே பிரிவில் இந்திய, பாக். அணிகள்

எஃப்ஐஎச் ஜூனியா் ஆடவா் உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் ஒரே பிரிவில் இடம் பெற்றுள்ளன. ஹாக்கி இந்தியா, ஹாக்கி தமிழ்நாடு, எஸ்டிஏடி சாா்பில் ஜூனியா் ஆடவா் ஹாக்கி உலகக் கோப்பை ... மேலும் பார்க்க

ஜெஸிக்கா பெகுலா சாம்பியன்

பேட் ஹாம்பா்க் டபிள்யுடிஏ டென்னிஸ் போட்டியில் அமெரிக்காவின் ஜெஸிக்கா பெகுலா சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினாா். ஜொ்மனியின் பேட் ஹாம்பா்க் நகரில் நடைபெற்று வரும் இப்போட்டியில் மகளிா் ஒற்றையா் பிரிவு இறு... மேலும் பார்க்க