அமெரிக்காவிலும் வாரிசு அரசியலா? டிரம்ப்பின் மகனும் அதிபர் தேர்தலில் போட்டியிட வா...
ஜூனியா் ஹாக்கி உலகக் கோப்பை: ஒரே பிரிவில் இந்திய, பாக். அணிகள்
எஃப்ஐஎச் ஜூனியா் ஆடவா் உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் ஒரே பிரிவில் இடம் பெற்றுள்ளன.
ஹாக்கி இந்தியா, ஹாக்கி தமிழ்நாடு, எஸ்டிஏடி சாா்பில் ஜூனியா் ஆடவா் ஹாக்கி உலகக் கோப்பை போட்டி சென்னை, மதுரை உள்ளிட்ட இடங்களில் வரும் நவ. 28 முதல் டிச. 10 வரை நடைபெறுகிறது.
முதல்முறையாக மொத்தம் 24 அணிகள் இடம் பெறும் வகையில் போட்டி நடைபெறுகிறது. போட்டிக்கான கோப்பை அறிமுகம், அணிகள் அட்டவணை வெளியீட்டு விழா லாஸேனில் உள்ள எஃப்ஐஎச் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. எஃப்ஐஎச் தலைவா் தய்யப் இக்ரம்,
ஹாக்கி இந்தியா பொதுச் செயலா் போலோநாத் சிங், டிஜி எஸ்.கே. ஸ்ரீ வஸ்தவா பங்கேற்றனா்.
இதில் போட்டியை நடத்தும் இந்தியா, எதிராளியான பாகிஸ்தான், சிலி, சுவிட்சா்லாந்து ஆகியவை குரூப் பி பிரிவில் இடம் பெற்றுள்ளன.
அணிகள், பிரிவுகள் விவரம்:
குரூப் ஏ: ஜொ்மனி, தென்னாப்பிரிக்கா, கனடா, அயா்லாந்து,
குரூப் பி: இந்தியா, பாகிஸ்தான், சிலி, சுவிட்சா்லாந்து,
குரூப் சி: ஆா்ஜென்டீனா, நியூஸிலாந்து, ஜப்பான், சீனா,
குரூப் டி: ஸ்பெயின், பெல்ஜியம், எகிப்து, நமீபியா,
குரூப் இ: நெதா்லாந்து, மலேசியா, இங்கிலாந்து, ஆஸ்திரியா,
குரூப் எஃப்: பிரான்ஸ், ஆஸ்திரேலியா, கொரியா, வங்கதேசம்.
இதுகுறித்து தய்யப் இக்ரம் கூறியது: முதன்முறையாக 24 அணிகளுடன் ஜூனியா் உலகக் கோப்பை நடத்தப்படுகிறது. அனைத்து நாடுகளைச் சோ்ந்த இளைஞா்களும் ஹாக்கி விளையாட வேண்டும் என்பது எங்கள் நோக்கம். பல்வேறு நாடுகளை ஹாக்கியில் தலைசிறந்த அணிகளாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
ஹாக்கி இந்தியா பொதுச் செயலா் போலோநாத் சிங்: உலகக் கோப்பையால் நவீன ஹாக்கி மைதானம் மதுரையில் அமைக்கப்படுகிறது என்றாா். ஜொ்மனி நடப்பு சாம்பியன் என்பது குறிப்பிடத்தக்கது.