செய்திகள் :

சஞ்சய் காந்தி பயோபிக் படத்தில் நடிக்கத் திட்டமிட்ட சூர்யா... ஆனால்!

post image

நடிகர் சூர்யா மறைந்த அரசியல்வாதி சஞ்சய் காந்தியின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தில் நடிக்கத் திட்டமிட்டிருந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் சூர்யா ரெட்ரோ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் ஆர். ஜே. பாலாஜி இயக்கத்தில் கருப்பு என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் தீபாவளி வெளியீடாகத் திரைக்கு வரும் எனத் தெரிகிறது.

தற்போது சூர்யா, வெங்கட் அட்லூரி இயக்கத்தில் தன் 46-வது படத்தில் இணைந்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், நேர்காணலில் பேசிய வெங்கட் அட்லூரி, “மறைந்த காங்கிரஸ் அரசியல்வாதி சஞ்சய் காந்தியின் வாழ்க்கை வரலாற்றை சூர்யா - 46 திரைப்படமாக எடுக்க முயற்சி செய்தோம். ஆனால், சஞ்சய் காந்தியின் பயோபிக் உரிமத்தைப் பெறுவதில் காலதாமதம் ஏற்பட்டது.

சூர்யாவும் சூரரைப் போற்று, ஜெய்பீம் என இரு உண்மைக் கதைகளில் நடித்துவிட்டார். அதனால், வேறு ஒரு கதையையே தற்போது எடுத்து வருகிறோம். இது, குடும்பங்கள் ரசிக்கும் படமாக இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.

நடிகர் சூர்யா, சஞ்சய் காந்தியின் பயோபிக் கதையில் நடிக்க ஆர்வம் காட்டியது சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க: பறந்து போ படத்தை எடுக்க இதுதான் காரணம்: இயக்குனர் ராம்

suriya plans to act sanjay gandhi biopic

ஓஹோ எந்தன் பேபி டிரைலர்!

விஷ்ணு விஷாலின் சகோதரர் நாயகனாக நடித்த ஓஹோ எந்தன் பேபி படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. நடிகர் விஷ்ணு விஷால் தன்னுடைய தம்பி ருத்ராவை நாயகனாக அறிமுகப்படுத்துகிறார். ரோமியோ பிக்சர்ஸ் மற்றும் விஷ்ணு விஷ... மேலும் பார்க்க

தக் லைஃப் ஓடிடி தேதி இதுவா?

நடிகர் கமல் ஹாசன் நடிப்பில் வெளியான தக் லைஃப் படத்தின் ஓடிடி தேதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது.மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு நடிப்பில் உருவான ‘தக் லைஃப்’ திரைப்படம் கடந்த ஜூன் 5-ஆம் தேதி வ... மேலும் பார்க்க

கிளப் உலகக் கோப்பை: காலிறுதிக்கு முன்னேறிய 2 அணிகள்!

கிளப் உலகக் கோப்பையில் காலிறுதிக்கு செல்ஸி, பல்மெய்ராஸ் அணிகள் முன்னேறியுள்ளன. ஃபிஃபா நடத்தும் கிளப் உலகக் கோப்பை போட்டிகள் அமெரிக்காவில் நடைபெற்று வருகின்றன. லீக் போட்டிகள் முடிந்து ரவுண்ட் ஆஃப் 16 எ... மேலும் பார்க்க

தி பாரடைஸ் படப்பிடிப்பில் இணைந்த நானி!

தி பாரடைஸ் படத்தின் படப்பிடிப்பில் நடிகர் நானி இணைந்துள்ளார். நடிகர் நானி தெலுங்கின் முன்னணி நடிகர்களில் ஒருவர். கடந்த சில ஆண்டுகளாகவே வியாபார ரீதியாகவும் பெரிய நட்சத்திர நடிகராக உருவெடுத்துள்ளார். இற... மேலும் பார்க்க

சீஷெல்ஸில் ஒரு காதல்... வைரலான சூர்யா - ஜோதிகா விடியோ!

நடிகை ஜோதிகா வெளியிட்ட புதிய விடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. தமிழ் சினிமாவின் நட்சத்திர ஜோடிகளில் கவனிக்கப்படும் இணையான சூர்யா - ஜோதிகா காதலித்து திருமணம் செய்துகொண்டவர்கள். பல நட்சத்திரங்கள் மேல் க... மேலும் பார்க்க

பூஜையுடன் தொடங்கியது கில்லர் படப்பிடிப்பு! திரைப் பிரபலங்கள் பங்கேற்பு!

எஸ்.ஜே.சூர்யா இயக்கும் கில்லர் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழில் பல வெற்றிப் படங்களைக் கொடுத்த இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா தற்போது நடிகராக மட்டுமே நடித்து வருகிறார்... மேலும் பார்க்க