செய்திகள் :

"அலங்காரத்திற்காக மாநில கல்விக் கொள்கை என்று நாடகமாடுகிறது திமுக" - அண்ணாமலை குற்றச்சாட்டு

post image

தமிழக முதல்வர் ஸ்டாலின் தேசிய கல்விக்கொள்கைக்கு எதிராக மாநில கல்விக்கொள்கையை இன்று (ஆகஸ்ட் 8) வெளியிட்டிருக்கிறார். இந்நிலையில் இதனை விமர்சித்து தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார்.

அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், "நாளொரு மேடை, பொழுதொரு நடிப்பு என்று நான்கு ஆண்டுகளாக வெறும் விளம்பரத்திலேயே ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் முதலமைச்சர் திரு.ஸ்டாலின் அவர்கள், மாநிலக் கல்விக் கொள்கை வெளியீடு என்ற பெயரில் இன்று மீண்டும் ஒரு நாடகத்தை அரங்கேற்றியிருக்கிறார்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

தேசிய அளவில் ஒருங்கிணைந்த கல்வி முன்னேற்றத்தை நோக்கமாகக் கொண்டு, மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் கொண்டு வந்த தேசியக் கல்விக் கொள்கையை ஏற்க மாட்டோம் என்று கூறி, கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் மாநிலக் கல்விக் கொள்கை என்ற பெயரில் ஒரு குழுவை அமைத்தார் முதலமைச்சர் திரு. ஸ்டாலின் இந்தக் குழு, இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, கடந்த 2024 ஆம் ஆண்டு, தனது வரைவு அறிக்கையைச் சமர்ப்பித்தது.

இந்தக் குழுவின் பரிந்துரைகளில் முக்கியமான பல கொள்கைகள், தேசியக் கல்விக் கொள்கையிலிருந்து எடுக்கப்பட்டவை என்பதை நாம் ஏற்கனவே சுட்டிக் காட்டியிருந்தோம். மேலும், காலை உணவுத் திட்டம், இல்லம் தேடிக் கல்வி உள்ளிட்ட தேசியக் கல்விக் கொள்கையிலிருந்து பல திட்டங்களை, ஏற்கனவே செயல்படுத்திக் கொண்டிருக்கிறது திமுக அரசு. மாநிலக் கல்விக் கொள்கை குழு அமைத்து மூன்று ஆண்டுகள் கடந்து விட்டன.

இந்த வருடக் கல்வி ஆண்டும் தொடங்கி விட்டது. இன்னும் ஏழு மாதங்களில், திமுக ஆட்சியும் அகற்றப்படவிருக்கிறது. மூன்று ஆண்டுகளாக தூங்கிக் கொண்டு, தற்போது இந்தக் கல்விக் கொள்கையை வெளியிடுவோம் என்பது, வெறும் விளம்பரம் இன்றி வேறென்ன? தமிழகம் முழுவதும், அமைச்சரின் சொந்த மாவட்டம் உட்பட பல பள்ளிகள் கட்டிடமின்றி மரத்தடியில் செயல்பட்டு வருகின்றன. திமுக ஒப்பந்ததாரர்களால் கட்டப்பட்ட பல பள்ளிக் கட்டிடங்கள், முதலமைச்சர் திறந்து வைத்த அடுத்த சில நாட்களிலேயே இடிந்து விழுந்து கொண்டிருக்கின்றன.

அண்ணாமலை
அண்ணாமலை

இவற்றை சரி செய்யாமல், வெறும் அலங்காரத்திற்காகக் கல்விக் கொள்கை என்று நாடகமாடிக் கொண்டிருக்கிறது திமுக அரசு. திமுகவினர் நடத்தும் தனியார் பள்ளிகளில், இந்தி உட்பட பல மொழிகள் கற்றுக் கொடுக்கப்படுகின்றன. ஆனால், அரசுப் பள்ளிகளில் இரண்டு மொழிகள்தான் கற்றுக் கொடுப்போம் என்று கூறுகிறார் முதலமைச்சர்.

பணம் இருப்பவர்கள் பல மொழிகள் கற்கலாம், ஏழை மாணவர்கள் இரண்டு மொழிதான் கற்க வேண்டும் என்பதுதான் திமுகவின் கொள்கை. இதில் என்ன சமத்துவம் இருக்கிறது, சமூக நீதி இருக்கிறது என்பதை, முதலமைச்சர்தான் கூற வேண்டும்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

அன்புமணி நடத்தும் பொதுக்குழுவுக்குத் தடையில்லை; ராமதாஸ் தரப்பு மனுவை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம்!

பாமக-வில் நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆகியோருக்கிடையில் நடைபெற்று வரும் கட்சி நிர்வாக மோதலுக்கு மத்தியில், ஆகஸ்ட் 17-ம் தேதி பொதுக்குழு கூட்டப்போவதாக ராமதாஸ் அறிவித்திருந்தார்.உடனே அன்புமணி அதற்... மேலும் பார்க்க

"வாக்குச்சாவடி வீடியோக்களை ஏன் அழிக்கிறீர்கள்?" - தேர்தல் ஆணையத்திற்கு ராகுல் காந்தியின் 5 கேள்விகள்

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, 2024 மக்களவை தேர்தல் மற்றும் அதற்கடுத்த 4 மாதங்களில் நடைபெற்ற மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் முறைகேடு நடந்திருப்பதாகவும், பா.ஜ.க-வுடன் சேர்ந்து இந்திய அர... மேலும் பார்க்க

திமுக: மீண்டும் எழுந்த `மாவட்ட பிரிப்பு’ பேச்சு - ஆர்வம் காட்டும் உதயநிதி; அறிவாலய அப்டேட்ஸ்!

2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒன்பது மாதங்களே இருக்கின்றன. ஆளும் திமுக, `ஓரணியில் தமிழ்நாடு’ என்ற உறுப்பினர் சேர்க்கை தொடங்கி `உடன்பிறப்பே வா’ என்ற நிர்வாகிகள் சந்திப்புவரை தேர்தலுக்கு முழு ஆயுதமா... மேலும் பார்க்க

"முறைகேடான வாக்காளர் பட்டியல் திருத்தம் பற்றி பழனிசாமி வாய் திறக்காதது ஏன்?" - அமைச்சர் துரைமுருகன்

வாக்காளர் பட்டியலில் மோசடி நடந்திருப்பதாகத் தேர்தல் ஆணையம் மற்றும் ஆளும் பாஜக மீது, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றச்சாட்டுகளை முன்வைத்த சம்பவம் சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறது. இந்நிலையில், ... மேலும் பார்க்க

பாகிஸ்தான், இஸ்ரேல் வரிசையில் கம்போடியா - ட்ரம்பிற்கு நோபல் பரிசு பரிந்துரை - காரணம் என்ன?

இந்தியா - பாகிஸ்தான் தாக்குதல் நிறுத்தத்திற்கு பிறகு, அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு, 'நோபல் பரிசு ஆசை' ரொம்பவே வந்துவிட்டது என்று கூறலாம். பாகிஸ்தான் ஆரம்பித்த ஒன்று! இந்தத் தீயை முதன்முதலில் பற்ற வைத்த... மேலும் பார்க்க

ராமதாஸ், அன்புமணி தனது அறையில் ஆஜராக சொல்லும் நீதிபதி! - இன்று மாலை நடக்குமா அந்த சந்திப்பு?

பாமக-வில் தந்தை-மகன் இடையேயான மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இருவர் தரப்பிலும் பொதுக்குழுவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அன்புமணி ராமதாஸ் அழைப்பு விடுத்துள்ள பொதுக்குழ... மேலும் பார்க்க