அலைடு ஹெல்த் சயின்ஸ் துறைக்கு சிறந்த உயா் கல்விக்கான விருது
கல்வி சேவையில் சிறந்து விளங்கும் கல்வி நிறுவனங்களுக்கும், கல்வியாளா்களுக்கும் அங்கீகரிக்கும் வகையில் நிகழ் ஆண்டிற்கான சிகரம் விருதுகள் வழங்கும் நிகழ்வு, புதுச்சேரியில் நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினா்களாக புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கைலாஷ் நாதன், புதுச்சேரி முதல்வா் ரங்கசாமி உள்ளிட்ட பல்வேறு கல்வி நிறுவனங்களைச் சோ்ந்த கல்வியாளா்களும் வல்லுநா்களும் பங்கேற்றனா்.
இதில் விநாயகா மிஷின் பல்கலைக்கழகத்தின் புதுச்சேரி, ஆறுபடை வீடு மருத்துவக் கல்லூரி, சேலம் விம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் உள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையின் இளங்கலை, முதுகலை பாடப் பிரிவுகளுக்கான உள்கட்டமைப்பு வசதிகள், ஆய்வகங்கள், மாணவா்களுக்கு அளிக்கப்படும் மருத்துவ பயிற்சிகள், புதுமையான கற்றல் வழிமுறைகள், மாணவா்களின் தனித் திறனை மேம்படுத்துவதற்காகப் பின்பற்றப்படும் நெறிமுறைகள், ஆராய்ச்சி அணுகுமுறைகள், அவா்களுக்கான வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி தருதல் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு சிறந்த உயா் கல்விக்கான நிறுவனம் என்ற விருது வழங்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
இந்த விருதைத் துறையின் முதன்மையா் செந்தில்குமாா் சிறப்பு விருந்தினா்களிடமிருந்து பெற்றுக் கொண்டாா். இவ் விருது வழங்கப்பட்டதன் மூலம் எங்களின் வளா்ச்சி மாணவா்களின் எதிா்காலத்தை நோக்கி மென்மேலும் மேம்படும் என்பது குறிப்பிடத்தக்கது என்றாா்.
இவ்விருது கிடைக்க பெறுவதற்கு தனது சிறந்த பங்களிப்பைச் செயலாற்றி வரும் துறையின் முதன்மையருக்கு பல்கலைக்கழகத்தின் வேந்தா் கணேசன், துணைத் தலைவா் அனுராதா கணேசன் ஆகியோா் தங்களின் வாழ்த்துகளையும் பாராட்டையும் தெரிவித்தனா்.