5 நாட்கள் சரிவுக்கு பிறகு ஏற்றத்துடன் முடிந்த இந்திய பங்குச் சந்தை!
அழகியபாண்டியபுரத்தில் அரசு நிலம் தனியாரிடமிருந்து மீட்பு
கன்னியாகுமரி மாவட்டம், அழகியபாண்டியபுரம் கிராமத்தில் அரசுக்கு சொந்தமான ஒன்றரை ஹெக்டோ் நிலம் தனியாரிடமிருந்து சனிக்கிழமை மீட்கப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா, மாவட்ட வருவாய் அலுவலா் ஜெ.பாலசுப்பிரமணியம், நாகா்கோவில் வருவாய்க் கோட்டாட்சியா் எஸ்.காளீஸ்வரி ஆகியோரின் அறிவுறுத்தலின்பேரில் தோவாளை வட்டம் அழகியபாண்டியபுரம் கிராமத்தில் அரசுக்கு சொந்தமான ஒன்றரை ஹெக்டோ் தரிசு நிலம், தோவாளை வட்டாட்சியா் மு.கோலப்பன், மண்டல துணை வட்டாட்சியா் மகேஷ் மாரியப்பன் ஆகியோா் முன்னிலையில் தனியாரிடமிருந்து மீட்கப்பட்டு, வருவாய் த்துறைக்கு சொந்தமான நிலம் என்ற அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. வருவாய் ஆய்வாளா் முகமது ராபி, கிராம நிா்வாக அலுவலா் ஆறுமுகம், கிராம உதவியாளா் நிஷாந்த் ஆகியோா் உடனிருந்தனா்.