செய்திகள் :

`அவங்க இருவருக்கும் பரஸ்பரம் விவாகரத்து ஆயிருச்சு' - புதுவாழ்வைத் தொடங்கிய பிக் பாஸ் மணிகண்டன்

post image

மறுமணம் செய்து கொண்ட பிக் பாஸ் மணிகண்டன் தனக்குக் குழந்தை பிறந்திருக்கும் செய்தியைப் பகிர்ந்திருக்கிறார். மணிகண்டனின் இந்தப் பதிவுக்குப் பதிலளிப்பது போல் அவரது முன்னாள் மனைவி சோபியாவும் பதில் கமென்ட் தெரிவிக்க, மணிகண்டனுக்கும் சோபியாவுக்கும் விவாகரத்து ஆன தகவல் வெளிவந்திருக்கிறது.

பிக் பாஸ் சீசன் 6ன் போட்டியாளரும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரருமான மணிகண்டனும் சீரியல் நடிகையுமான சோபியாவும் காதலித்துத் திருமணம் செய்து கொண்டவர்கள். இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறான். பிக் பாஸ் சீசன் 6ன் போது மணிகண்டனைப் பார்க்க அவரின் மனைவியும் மகனும் வந்த போது மகனை மணிகண்டன் ஆரத் தழுவி அணைத்த காட்சி காண்போரை நெகிழ வைத்தது நினைவிருக்கலாம்.

என்ன காரணமோ தெரியவில்லை, மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த இந்த தம்பதியின் வாழ்க்கையில் பிரச்னை உருவாகி இருவரும் சில வருடங்களாகப் பிரிந்து வாழத் தொடங்கினர்.

பிரச்னையைச் சுமுகமாகத் தீர்த்து வைக்க நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் எவ்வளவோ முயன்று பார்த்ததாகவும் ஆனால் அந்த முயற்சி பலன் தரவில்லை எனவும் சொல்லப்பட்டது.

பிக்பாஸ் மணிகண்டன்

இது தொடர்பாக ஏற்கனவே விகடன் தளத்தில் செய்தி வெளியானது.

இந்த நிலையில் தற்போது இரண்டாவது மனைவி மூலம் தனக்கு பெண் குழந்தை பிறந்திருக்கும் செய்தியைப் பகிர்ந்திருக்கிறார் மணிகண்டன்.

மணிகண்டனும் சோபியாவும் பிரிந்து வாழ்ந்து வருவதாகவே பலரும் நினைத்திருந்த நிலையில் தற்போது வெளிப்படையாக தனக்கு குழந்தை பிறந்திருக்கும் தகவலை மணிகண்டன் பகிர்ந்திருப்பது குறித்து மணிகண்டனின் நட்பு வட்டத்தில் சிலரிடம் பேசினோம்.

''பிக் பாஸ் நிகழ்ச்சியில் மணி இருந்தவரைக்கும் அவருக்கும் சோபியாவுக்கும் இடையில் எந்தப் பிரச்னையும் இல்லை. பிக் பாஸுக்குப் பிறகுதான் ரெண்டு பேருக்குமிடையில் கருத்து வேறுபாடு உருவாச்சு. மணி தனியா ஒரு பிசினஸ்ல ஈடுபட்டதாகவும் அதனால முக்கால்வாசி நாள் வீட்டுலயே தங்கறதில்லைனும் தெரியவந்துச்சு. மணிகண்டனின் சகோதரி ஐஸ்வர்யா ராஜேஷ் இந்தப் பிரச்னையைச் சரி செய்ய ட்ரை பண்ணினார். ஆனா சரியாகல. ஒருகட்டத்துல ரெண்டு பேருமே விவாகரத்துக்கு விண்ணப்பிச்சாங்க.

விஜய் சேதுபதியுடன் மணிகண்டன்

கோர்ட்ல மியூச்சுவல் அடிப்படையில் விவாகரத்து ஆனதா தெரிய வருது.

அதன் பிறகு மணி சாய்ங்கிற தன்னுடைய கேர்ள் ப்ரண்ட் ஒருத்தவங்க கூட பழகத் தொடங்கினார். பிறகு கொஞ்ச நாள்ல அவங்களையே திருமணமும் செய்துகிட்டார். அவங்க மூலமாகத்தான் இப்ப பெண் குழந்தை பிறந்ததையும் அறிவிச்சிருக்கார்'' என்கிறார்கள் அவர்கள். மணிகண்டன் குழந்தை பிறந்த தகவலை அறிவித்ததையடுத்து சோபியாவும் ஒரு பதிவை சமூக வலைதளம் வழியே வெளியிட்டிருக்கிறார். அதில் 'என் வாழ்க்கையில் புதிய அத்தியாயம் தொடங்கியிருக்கிறது. நான் இன்னும் வலிமையாகியிருக்கிறேன்' எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

எது எப்படியோ இருவருக்குமே வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர் அவரவர் ரசிகர்கள்.

`பெத்த குழந்தையே யாருன்னு தெரியல... எதிரிக்குக்கூட இது நடக்கக் கூடாது!' - கலங்கும் கரோலின் ஃபேமிலி

சின்னத்திரையில் பரிச்சயமான முகம் கரோலின். விஜேவாக தனது பயணத்தை மீடியாவில் தொடங்கியவர் சின்னத்திரை நடிகையாக பல தொடர்களில் நடித்திருந்தார். கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான `ஜமீலா' தொடரில் தான் ... மேலும் பார்க்க

``நான் முதன்முதலா டூர் போனது 'கூமாப்பட்டி'க்குதான்; அங்க..!” - பிக்பாஸ் தினேஷ் சொல்லும் கதை

'ஊட்டி கொடைக்கானல் எதுக்குங்க, எங்க ஊரை வந்து பாருங்க, திரும்பிப் போக உங்களூக்கு மனசே வராது' என உள்ளூர்க்கார யூ டியூபர் ஒருவர் வீடியோ வெளியிட, ஓவர் நைட்டில் கூகுள் ஸ்தம்பிக்கும் அளவு ஃபேமஸாகி விட்டது ... மேலும் பார்க்க