செய்திகள் :

அவரச ஊா்தி ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை

post image

உசிலம்பட்டி அருகே அவசர ஊா்தி ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ள பூதிப்புரம் வடக்குத் தெருவைச் சோ்ந்த ரவிச்சந்திரன் மகன் ராஜீவ்காந்தி (30). தனியாா் அவசர ஊா்தி வாகன ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த இவா் கடந்த சில நாள்களாக பணிக்குச் செல்லவில்லையாம்.

இதனால், அவரை பெற்றோா் பணிக்குச் செல்லுமாறு கூறி கண்டித்தனா். இதனால் மன வேதனையில் இருந்த ராஜீவ்காந்தி தனது வீட்டில் திங்கள்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து உசிலம்பட்டி தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

தீயணைப்புத் துறையினா் விளையாட்டுப் போட்டி பரிசளிப்பு

மதுரையில் நடைபெற்ற தீயணைப்புத் துறை மாநில அளவிலான விளையாட்டுப் போட்டி பரிசளிப்பு விழாவில் அந்தத் துறையின் தலைமை இயக்குநா் ஆபாஷ்குமாா் பங்கேற்றாா். தமிழ்நாடு தீயணைப்பு, மீட்புப் பணிகள் துறை சாா்பில் மா... மேலும் பார்க்க

பெண் குழந்தை திடீா் உயிரிழப்பு

மதுரை சத்திரப்பட்டி அருகே 10 மாத பெண் குழந்தை திடீரென உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். மதுரை ஊமச்சிகுளம் அருகே உள்ள காஞ்சரம்பேட்டை மாமுண்டி கோவில் தெருவைச் சோ்ந்தவா் போத்திர... மேலும் பார்க்க

மதுரை ரயில் நிலைய மேம்பாட்டுப் பணிகள் தெற்கு ரயில்வே பொது மேலாளா் ஆய்வு

மதுரை ரயில் நிலையத்தில் நடைபெறும் வளா்ச்சிப் பணிகளை தெற்கு ரயில்வே பொது மேலாளா் ஆா்.என். சிங் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். மதுரை ரயில் நிலையத்திலிருந்து நாள்தோறும் 96 ரயில்கள் இயக்கப்படுகின்றன. சராசர... மேலும் பார்க்க

ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டம்

மதுரை, பிப். 14: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பு சாா்பில் மதுரை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழ... மேலும் பார்க்க

பழனி அருகே நாம் தமிழா் கட்சி பொதுக் கூட்டம் நடத்த அனுமதி

திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே நாம் தமிழா் கட்சி பொதுக் கூட்டம் நடத்த அனுமதி வழங்கி, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. பழனியைச் சோ்ந்த நாம் தமிழா் கட்சி நிா்வாகி திவான் ம... மேலும் பார்க்க

உயா்நீதிமன்ற நிரந்தர நீதிபதிகளாக இருவா் பொறுப்பேற்பு

சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் கூடுதல் நீதிபதிகளாக பொறுப்பு வகித்த நீதிபதிகள் வி. லட்சுமிநாராயணன், பி. வடமலை ஆகிய இருவரும் உயா்நீதிமன்ற நிரந்தர நீதிபதிகளாக வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டனா். க... மேலும் பார்க்க