செய்திகள் :

'அவரைக் கேளுங்க சார்!' - செங்கோட்டையன் குறித்து இபிஎஸ் பதில்!

post image

அதிமுக எம்எல்ஏ-க்கள் கூட்டத்தில் ஏன் கலந்துகொள்ளவில்லை என்று செங்கோட்டையனிடமே கேளுங்கள் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

அத்திக்கடவு - அவினாசி திட்ட கூட்டமைப்பு மற்றும் விவசாயிகள், கடந்த மாதம் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு நடத்திய பாராட்டு விழாவில் ஜெயலலிதா, எம்ஜிஆர் படங்கள் இடம்பெறவில்லை என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறியிருந்தார்.

இதையடுத்து எடப்பாடி பழனிசாமி மீது செங்கோட்டையன் அதிருப்தியில் இருப்பதாக பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. அதிமுக பொதுச் செயலாளர் என்று கூறும் செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமியின் பெயரைக் குறிப்பிடுவதில்லை.

இந்த நிலையில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமியின் அறையில் நடைபெற்ற அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை.

மேலும் செங்கோட்டையன், பேரவைத் தலைவர் அப்பாவுவை தனியாகச் சந்தித்தும் பேசியுள்ளார். இது அரசியலில் மேலும் சலசலப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.

சென்னையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழாவில்கூட கட்சியின் முக்கிய நிர்வாகியான செங்கோட்டையன் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில்தான் சென்னையில் செய்தியாளர்களுடன் பேசிய எடப்பாடி பழனிசாமியிடம் செங்கோட்டையன் குறித்து கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த இபிஎஸ், "அதிமுக எம்எல்ஏ-க்கள் கூட்டத்தை செங்கோட்டையன் ஏன் தவிர்த்தார் என்று அவரிடமே கேளுங்கள். அவரிடம் கேட்டால்தானே தெரியும்" என்று கூறினார்.

மேலும், "அதிமுக சுதந்திரமாக செயல்படக் கூடிய கட்சி. திமுகவை போல் நாங்கள் யாரையும் அடிமைகளாக வைத்திருக்கவில்லை. நான் என்றும் யாரையும் எதிர்பார்த்தது கிடையாது. நான் சாதாரண தொண்டன். தலைவன் அல்ல.

அதேபோல் திமுகபோல வாரிசு அரசியலோ, குடும்பக் கட்சியோ அதிமுக இல்லை. இது ஒன்றும் சர்வாதிகார கட்சி அல்ல. அனைவரும் சுதந்திரமாக செயல்படலாம். எங்களுக்கு ஒரே எதிரி திமுக மட்டும்தான். எங்கள் கட்சி உறுப்பினர்கள் சுதந்திரமாக செயல்பட எந்த தடையும் இல்லை. வேறு எந்தக் கட்சியிலும் இந்த சுதந்திரம் இல்லை. நாங்கள் அனைவரும் ஒன்றாக பணியாற்றியவர்கள்" என்று தெரிவித்தார்.

ஹிந்தி சர்ச்சை: பவன் கல்யாண் பிறப்பதற்கு முன்பே தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கை அமல்! -திமுக எதிர்வினை

பவன் கல்யாண் பிறப்பதற்கு முன்பே தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கை அமலில் இருப்பதாக திமுக தரப்பில் எதிர்வினையாற்றப்பட்டுள்ளது. வணிக ரீதியாக பலனடைய வேண்டி தமிழ் திரைப்படங்களை ஹிந்தியில் மொழி பெயர்ப்பு செய்... மேலும் பார்க்க

ஐபிஎல்: சிஎஸ்கே ரசிகர்களுக்கு குட் நியூஸ்!

மார்ச் 23இல் சென்னை மெட்ரோவில் சிஎஸ்கே கிரிக்கெட் டிக்கெட்டை காண்பித்து இலவசமாக பயணிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை மெட்ரோ நிர்வாகம் தனது எக்ஸ் தளத்தில், சென்னை மெட்ரோ ரயில் நிற... மேலும் பார்க்க

திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையத்தில் கூடுதல் வாகனங்கள் நிறுத்தும் வசதி!

திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையத்தில் பயணிகளின் வசதிகாக கூடுதல் வாகனம் நிறுத்துமிடம் வசதி விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் அதிகரித்து வரும் பயணிகளின் தேவையை பூர்த்திசெய்ய... மேலும் பார்க்க

முத்தான திட்டங்களுடன் வேளாண் பட்ஜெட்- முதல்வர் மு.க.ஸ்டாலின்

பல்வேறு முத்தான திட்டங்களுடன் வேளாண் பட்ஜெட் வெளியிடப்பட்டுள்ளது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், நமது வேளாண் பெருங்குடி மக்களின் வாழ்வு மேம்படும் வகையில... மேலும் பார்க்க

டாஸ்மாக் ஊழல்: எந்த நடவடிக்கையும் அமலாக்கத்துறை எடுக்காதது ஏன்? சீமான் கேள்வி

டாஸ்மாக் ஊழல் விவகாரத்தில் எந்த நடவடிக்கையும் அமலாக்கத்துறை எடுக்காதது ஏன்? என நாம்தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், தமிழ்நாடு ... மேலும் பார்க்க

வெறும் காகிதக் குவியலே தவிர வேறொன்றுமில்லை: வேளாண் பட்ஜெட்டை விமர்சித்த அண்ணாமலை

வெறும் காகிதக் குவியலே தவிர வேறொன்றுமில்லை என்று வேளாண் பட்ஜெட்டை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், வேளாண் பட்ஜெட் என்ற பெயரில் பொய்யும் புரட்ட... மேலும் பார்க்க