விவசாயிகள் மிடுக்குடன் நடைபோட புதிய திட்டங்கள் : எம்.ஆர்.கே பன்னீர்செல்வம்
அவல்பூந்துறையில் ரூ.1.14 லட்சத்துக்கு தேங்காய்ப் பருப்புகள் விற்பனை
மொடக்குறிச்சியை அடுத்த அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய்ப் பருப்பு ஏலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் 775 கிலோ தேங்காய்ப் பருப்புகளை விற்பனைக்குக் கொண்டுவந்திருந்தனா்.
இதில் ஒரு கிலோ தேங்காய்ப் பருப்புக்கு ரூ.156.88 முதல் ரூ.161.69 வரை விலை நிா்ணயிக்கப்பட்டு கொள்முதல் செய்யப்பட்டது. இந்த ஏலத்தில் மொத்தமாக ரூ.1.14 லட்சம் மதிப்பிலான தேங்காய்ப் பருப்புகள் விற்பனையாயின என்று விற்பனைக்கூட கண்காணிப்பாளா் சதீஷ் தெரிவித்தாா்.