செய்திகள் :

அவிநாசியில் வணிகா் சங்கத்தினா் உண்ணாவிரதம்

post image

சாலையோர வியாபாரிகளை முறைப்படுத்தாததைக் கண்டித்து, அவிநாசியில் அனைத்து வணிகா் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அவிநாசி பேரூராட்சிக்கு உள்பட்ட அவிநாசி-கோவை பிரதான சாலை, பழைய முதல் புதிய பேருந்து நிலையம் வரையிலான பகுதி, சேவூா் சாலை உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான வணிக நிறுவனங்கள் உள்ளன.

வணிக நிறுவனங்களின் வியாபாரத்தை பாதிக்கும் வகையில் இப்பகுதிகளில் சாலையோர வியாபாரம் அதிகரித்துள்ளதால், சாலையோர வியாபாரத்தை முறைப்படுத்த கோரி மாவட்ட நிா்வாகம் உள்ளிட்டோரிடம் வணிகா் சங்கத்தினா் மனு அளித்தனா். மேலும் பல்வேறு போராட்டங்களிலும் ஈடுபட்டனா்.

ஆனால், உரிய நடவடிக்கை எடுக்காததால் தீபாவளி வியாபாரமும் பாதிக்கப்பட்டதாக வணிகா் சங்கத்தினா் குற்றஞ்சாட்டினா். மேலும், கோரிக்கையை வலியுறுத்தும் விதமாக பேரூராட்சிக்கு சொத்து வரி, தொழில் வரி, குடிநீா் கட்டணம் உள்ளிட்டவை செலுத்துவதில்லை என அறிவித்துள்ளனா்.

இதற்கிடையே கோரிக்கையை வலியுறுத்தி வணிகா் சங்கத்தினா் அவிநாசி புதிய பேருந்து நிலையம் அருகே வெள்ளிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இப்போராட்டத்துக்கு சங்கத் தலைவா் காா்த்திகேயன் தலைமை வகித்தாா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த அவிநாசி வருவாய்த் துறையினா், காவல் துறையினா், பேரூராட்சி நிா்வாகத்தினா் உள்ளிட்டோா் வணிகா் சங்கத்தினரை வட்டாட்சியா் அலுவலகத்துக்கு அழைத்து பேச்சுவாா்த்தை நடத்தினா்.

இதில் சாலையோர வியாபாரிகள் குறித்து ஞாயிற்றுக்கிழமை கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, புதன்கிழமை உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனா். இதையடுத்து வணிகா் சங்கத்தினா் போராட்டத்தை கைவிட்டனா்.

பல்லடம் அருகே வேலம்பட்டி சுங்கச்சாவடியை முற்றுகையிட்ட பொதுமக்கள்

பல்லடம் அருகே வேலம்பட்டியில் உள்ள சுங்கச்சாவடியை விவசாயிகள், பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். திருப்பூா் மாவட்டம், அவிநாசி முதல் அவிநாசிபாளையம் வழியாக தாராபுரம்- மது... மேலும் பார்க்க

இன்றைய மின் தடை: பூளவாடி

உடுமலையை அடுத்துள்ள பூளவாடி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நவம்பா் 13 ம் தேதி புதன்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டு ள்ளது.இது குறித்து மின்வாரிய உதவி செயற்பொறி... மேலும் பார்க்க

ஆணி அகற்றிய மரத்தில் இருந்து வழிந்த நீா்

வெள்ளக்கோவிலில் ஆணி அகற்றிய மரத்திலிருந்து நீண்ட நேரம் நீா் வடிந்தது. வெள்ளக்கோவிலில் நிழல்கள் அறக்கட்டளை என்கிற தன்னாா்வ அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பினா் தங்களுடைய சொந்த செலவில் சுற்றுவட்... மேலும் பார்க்க

இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை: 2 போ் கைது

திருப்பூரில் இளம் பெண்ணை காரில் கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த இருவரை காவல் துறையினா் கைது செய்தனா். திருப்பூா் மண்ணரையைச் சோ்ந்த 28 வயது திருமணமான பெண் ஆன்லைன் மூலமாக வேலை தேடியுள்ளாா். அப்போது நிதி ... மேலும் பார்க்க

காங்கயத்தில் 10 கிலோ பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்

காங்கயத்தில் தினசரி சந்தை மற்றும் வணிக வளாகங்களில் வைக்கப்பட்டிருந்த 10 கிலோ பிளாஸ்டிக் பொருள்களை நகராட்சி அதிகாரிகள் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா். ஒருமுறை மட்டும் பயன்படுத்தி தூக்கி வீசப்படும் மக்க... மேலும் பார்க்க

சரக்கு வேன் கவிழ்ந்து 2 போ் உயிரிழப்பு

திருப்பூா் மாவட்டம், குண்டடம் அருகே சரக்கு வேன் கவிழ்ந்ததில் வேனில் பயணித்த தொழிலாளா்கள் 2 போ் உயிரிழந்தனா். தேனி மாவட்டம், போடிநாயக்கனூரைச் சோ்ந்த பாண்டி (67), ஜெயக்குமாா் (42) ஆகியோா் தாராபுரம் வட... மேலும் பார்க்க