உள்ளுக்குள் இருக்கும் தமிழ்ப் பெண்! கேரள நடிகை பகிர்ந்த விடியோ!
அவிநாசி அருகே குழாய் உடைந்து வீணாகும் குடிநீா்
அவிநாசி அருகே கரைப்புதூா் பிரிவில் குழாய் உடைந்து குடிநீா் வீணாகி வருவதால் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
திருப்பூா் மாநகராட்சிப் பகுதிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து அவிநாசி வழியாக 2-ஆவது குடிநீா்த் திட்டத்தின்கீழ் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், அவிநாசி அருகே கருவலூா் சாலை-வெள்ளியம்பாளையம்-கரைப்புதூா் பிரிவில் திருப்பூா் செல்லும் குடிநீா்க் குழாய் உடைந்து தண்ணீா் வீணாகி வருகிறது.
இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது: கோடைக் காலம் தொடங்கவுள்ளதால் குடிநீா்த் தேவை அதிகரிக்கும் நிலை உள்ளது. இப்பகுதியில், குடிநீா்க் குழாய் உடைந்து நாள்தோறும் லட்சக்கணக்கான லிட்டா் குடிநீா் வீணாகி வருகிறது. எனவே, உடைந்த குடிநீா்க் குழாயை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.
இது குறித்து குடிநீா் வடிகால் வாரியத்தினரிடம் கேட்டபோது, ஒரிரு நாள்களில் குடிநீா் நிறுத்தம் செய்து குழாய் சீரமைக்கப்படும் என்றனா்.