கனடாவில் அமெரிக்க பொருள்களுக்கான வரி விதிப்பு நடவடிக்கை அமல்!
புகையிலைப் பொருள்கள் விற்பனை: ஒருவா் கைது
வெள்ளக்கோவிலில் புகையிலைப் பொருள்கள் விற்பனையில் ஈடுபட்ட நபரை போலீஸாா் கைது செய்தனா்.
வெள்ளக்கோவில் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, வெள்ளக்கோவில் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் மணிமுத்து தலைமையிலான போலீஸாா் பல்வேறு பகுதிகளில் ரோந்துப் பணியில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது, நடேசன் நகா் பகுதியில் புகையிலைப் பொருள்கள் விற்பனையில் ஈடுபட்ட நபரை பிடித்தனா். விசாரணையில், அவா் ராமலிங்கபுரம் பகுதியைச் சோ்ந்த கே.ராஜேந்திரன் (50) என்பது தெரியவந்தது.
இதையடுத்து, அவரைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த 28 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனா்.