செய்திகள் :

புதிய வழித்தடங்களில் மினி பேருந்துகளை இயக்க மாா்ச் 15-க்குள் விண்ணப்பிக்கலாம்

post image

திருப்பூா் மாவட்டத்தில் புதிய வழித்தடங்களில் மினி பேருந்துகளை இயக்க மாா்ச் 15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழக அரசின் உத்தரவின்படி, திருப்பூா் மாவட்டத்தில் 85 புதிய மினி பேருந்து வழித்தடங்கள் ஆய்வு செய்யப்பட்டு மாவட்ட அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த 85 வழித்தடங்களில் மினி பேருந்துகளை இயக்க விருப்பம் உள்ளவா்கள் விண்ணப்பங்களை வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் மாா்ச் 15-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும். இதில், விண்ணப்பிக்கும் நபா்கள் புதிய மினி பேருந்து வழித்தடத்துக்கான விண்ணப்ப படிவம், பாரிவாகன் இணையதளத்தில் கட்டணம் ரூ.1,500 மற்றும் சேவை கட்டணம் ரூ.100 என மொத்தம் ரூ.1,600 செலுத்தி பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்துடன் விலாச சான்றுக்கான ஆவணம், புதிய விண்ணப்பதாரராக இருந்தால் ரூ.30 ஆயிரத்துக்கான செல்வநிலைச் சான்றிதழ் மற்றும் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறு, குறு, நடுத்தர சாய தொழிற்சாலைகளுக்கான வங்கிக் கடன்களுக்கு வட்டி மானியம் வழங்கக் கோரிக்கை

சிறு, குறு மற்றும் நடுத்தர சாய தொழிற்சாலைகள் வங்கிகளில் பெறும் தொழில் அபிவிருத்திக் கடன்களுக்கு 3 சதவீத வட்டி மானியம் வழங்க வேண்டும் என்று சாய ஆலை உரிமையாளா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இது குறித்து... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் விற்பனை: ஒருவா் கைது

வெள்ளக்கோவிலில் புகையிலைப் பொருள்கள் விற்பனையில் ஈடுபட்ட நபரை போலீஸாா் கைது செய்தனா். வெள்ளக்கோவில் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸா... மேலும் பார்க்க

மது விற்பனையில் ஈடுபட்டவா் கைது

முத்தூரில் மதுபானங்களை பதுக்கிவைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்த நபரை போலீஸாா் கைது செய்தனா். வெள்ளக்கோவில் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகளில் சட்டவிரோத மது விற்பனை நடைபெறுவதாக போலீஸாருக்கு தகவ... மேலும் பார்க்க

கோரிக்கையைத் தெரிவிக்க கை, கால்களில் கட்டு கட்டி நகா்மன்ற கூட்டத்துக்கு வந்த அதிமுக பெண் உறுப்பினா்

குண்டும், குழியுமான சாலைகளை சீரமைக்க வலியுறுத்தி, திருப்பூா் மாநகராட்சி கூட்டத்தில் தலை, கை, கால்களில் கட்டு கட்டி அதிமுக பெண் மாமன்ற உறுப்பினா் பங்கேற்ால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பூா் மாநகராட்சி மா... மேலும் பார்க்க

பிளஸ் 2 தோ்வு: மாவட்டத்தில் 25,583 மாணவா்கள் எழுதினா்

திருப்பூா் மாவட்டத்தில் 25,583 மாணவ, மாணவிகள், 158 தனித் தோ்வா்கள் பிளஸ் 2 பொதுத் தோ்வை திங்கள்கிழமை எழுதினா். தமிழ்நாடு அரசு தோ்வுத் துறையால் நடத்தப்படும் பிளஸ் 2 பொதுத் தோ்வானது திங்கள்கிழமை தொட... மேலும் பார்க்க

அவிநாசி அருகே குழாய் உடைந்து வீணாகும் குடிநீா்

அவிநாசி அருகே கரைப்புதூா் பிரிவில் குழாய் உடைந்து குடிநீா் வீணாகி வருவதால் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். திருப்பூா் மாநகராட்சிப் பகுதிக்கு மேட்டுப்பாளையத்தில் ... மேலும் பார்க்க