செய்திகள் :

ஆகஸ்டில் 46 டிஎம்சி காவிரி நீர்: உறுதிப்படுத்த தமிழகம் வலியுறுத்தல்

post image

நமது நிருபர்

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரியில் ஆகஸ்ட் மாதத்துக்குரிய 45.95 டிஎம்சி நீரை கர்நாடகம் திறந்துவிடுவதை உறுதிப்படுத்த வேண்டும் என்று தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற காவிரி நதிநீர் மேலாண்மை ஆணைய (சி.டபிள்யு.எம்.ஏ.) கூட்டத்தில் தமிழகம் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

கடந்த ஜூன் 26-ஆம் தேதி நடைபெற்ற சி.டபிள்யு.எம்.ஏ. 41- ஆவது கூட்டத்தின்போது, உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி தமிழகத்துக்குரிய ஜூலை மாதத்துக்கான நீர் அளவை (31.24 டிஎம்சி) கர்நாடகம் உறுதிப்படுத்த வேண்டும் என்று தமிழகத்தின் தரப்பில் வலியுறுத்தப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து, கர்நாடக நீர்ப்பிடிப்புப் பகுதியில் பருவமழை தொடர்ந்து பெய்துவந்ததால் காவிரியில் நீர் திறந்துவிடப்பட்டிருந்தது.

இதனிடையே, வழக்கமாக நடைபெறும் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் 119-ஆவது கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் 42-ஆவது கூட்டம் அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தார் தலைமையில் தில்லியில் உள்ள அதன் அலுவலகத்தில் புதன்கிழமை நேரடியாகவும், காணொலி மூலமாகவும் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு அரசு சார்பாக நீர்வளத் துறைச் செயலரும், குழுவின் உறுப்பினருமான ஜெ.ஜெயகாந்தன் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி மூலம் கலந்துகொண்டார்.

அவர் கூட்டத்தின்போது கூறியதாவது: ஜூலை 30-ஆம் தேதி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர் இருப்பு அதன் முழுக் கொள்ளளவான 93.470 டிஎம்சி ஆக உள்ளது. கர்நாடகத்தில் உள்ள கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகளில் இருந்து அதிகமான உபரிநீர் வெளியேற்றப்படுவதால் மேட்டூர் அணைக்கு இன்று (புதன்கிழமை) காலை நீர்வரத்து விநாடிக்கு 1,12,555 கனஅடியாக இருந்த நிலையில் தற்போது குறைந்து வருகிறது.

ஆகவே, நிலைமைக்கு ஏற்ப மேட்டூர் அணையில் இருந்து நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கர்நாடக அணைகளின் நீர் இருப்பு மற்றும் நீர்வரத்து கணிசமான அளவு தொடர்ந்துவருவதாலும், தமிழகத்துக்கு நிகழாண்டு ஆகஸ்ட் மாதம் வழங்கப்பட வேண்டிய நீர் அளவான 45.95 டிஎம்சி நீரை உச்சநீதிமன்ற உத்தரவுப்படி பிலிகுண்டுலுவில் கர்நாடகம் திறந்துவிடுவதை உறுதி செய்ய வேண்டும் என்று ஆணையத்தைக் கேட்டுக்கொண்டார். இதை ஆணையம் கவனத்தில் எடுத்துக்கொண்டது.

இக்கூட்டத்தில் காவிரி தொழில்நுட்பக் குழுத் தலைவர் ஆர். சுப்பிரமணியமும் காணொலி மூலம் கலந்துகொண்டார். கேரளம், கர்நாடகம், புதுச்சேரி ஆகிய பிற மாநிலங்களில் இருந்தும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

கற்பனை உலகில் வாழும் மோடி அரசும், அதன் ஆதரவாளர்களும்: ஜெய்ராம் ரமேஷ்

பிரதமர் நரேந்திர மோடி அரசு, உண்மையிலேயே நாட்டின் பொருளாதார நிலை குறித்த உண்மையைப் பேசுவதேயில்லை என காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் ஜெய்ராம் ரமேஷ் கூறியிருக்கிறார்.கடந்த பத்தாண்டுகளாக, பெரும்பாலான தொழ... மேலும் பார்க்க

ரூ. 15,000 சம்பளம்; ஆனால், 24 வீடுகள், 40 ஏக்கர் நிலம், 4 மனைகள்! முன்னாள் அரசு ஊழியரின் மோசடி அம்பலம்!

கர்நாடகத்தில் முன்னாள் அரசு ஊழியர் ரூ. 72 கோடிக்குமேல் மோசடி செய்ததாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.கர்நாடகம் மாநிலத்தில் கொப்பல் நகரில் கிராமப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் துறையில் எழுத்தராகப் பணிப... மேலும் பார்க்க

ஆட்டோவில் சென்ற ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு!

ஆந்திர முதல்வர் சந்திரபாபு அரசு நிகழ்வு ஒன்றில் பங்கேற்க ஆட்டோவில் சென்று அனைவரின் கவனத்தை ஈர்த்தார். ஆந்திர மாநிலம், கடப்பாவில் அரசு சார்பில் ஓய்வூதியம் வழங்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந... மேலும் பார்க்க

சைபர் மோசடியால் ரூ. 1.2 லட்சம் கோடியை இந்தியர்கள் இழப்பார்களா? நீங்களும் ஜாக்கிரதையாக இருங்கள்!

கடந்தாண்டில் மட்டும் சைபர் குற்றங்கள் மற்றும் மோசடிகளால் இந்தியர்களிடம் ரூ. 22,842 கொள்ளையடிக்கப்பட்டதாக தில்லி ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.சைபர் குற்றங்கள் மற்றும் மோசடி சம்பவங்கள் நாள்தோறும் நடந்... மேலும் பார்க்க

ராகுல் காந்தி கூறியது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள்: தேர்தல் ஆணையம் பதில்

வாக்குகள் திருடப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியதற்கு தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது. பிகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மூலமாக பல லட்சம் வாக்காளர்களை, வாக்காள... மேலும் பார்க்க

இந்துக்களைப் பயங்கரவாதிகளாக சித்தரிக்க காங்கிரஸ் முயற்சி: ஃபட்னவீஸ்

மாலேகான் குண்டுவெடிப்புக்குப் பிறகு காங்கிரஸ் இந்துக்களைப் பயங்கரவாதிகளாக சித்தரிக்க முயன்றதாகவும், ஆர்எஸ்எஸ் மற்றும் இந்துத்துவா நிர்வாகிகள் திட்டமிட்ட முறையில் குறிவைக்கப்பட்டதாகவும் மகாராஷ்டிர முதல... மேலும் பார்க்க