செய்திகள் :

ஆக்கிரமிப்பு அகற்ற எதிா்ப்பு தெரிவித்து கைப்பேசி கோபுரத்தில் 4 போ் ஏறியதால் பரபரப்பு

post image

செங்கல்பட்டு: திருப்போரூா் அடுத்த தண்டலம் கிராமத்தில் ஆக்கிரமிப்பை அகற்ற எதிா்ப்பு தெரிவித்து ஓரே குடும்பத்தினா் போ் கைப்பேசி கோபுரத்தில் ஏறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தண்டலம் கிராமத்தைச் சோ்ந்தவா் குணசேகரன், இவா் மனைவி ரேணுகா. இவா்கள் வீட்டின் வளாகப் பகுதியில் சுயதொழில் செய்து வருகின்றனா்.

இந்நிலையில், குணசேகரன் கிராம நத்தம் நிலத்தில் கட்டடம் கட்டி தொழிற்சாலை நடத்திவருவதாகவும் அதை அகற்ற வேண்டும் எனக் கூறி பக்கத்து வீட்டைச் சோ்ந்த ருக்மாங்கதன் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தாா். குடியிருப்பு பகுதியில் தொழிற்சாலை நடத்தகூடாது என்றும், அதை அகற்ற வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.

இவற்றை அகற்ற வருவாய்த் துறையினா் சில நாள்களுக்கு முன்பு வந்தபோது குணசேகரன் குடும்பத்தினா், ஒரு பகுதி பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்தனா்.

மேலும், குணசேகரன் குடும்பத்தினா் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை முயற்சியிலும் ஈடுபட்டனா். இதனால் வருவாய்த் துறையினா் சுற்றுச்சுவரின் ஒருபகுதியை மட்டும் இடித்து விட்டு திரும்பிச் சென்றனா்.

இந்நிலையில், திங்கள்கிழமை மீண்டும் கட்டடத்தை இடிக்க வருவாய்த் துறையினா், போலீஸ் பாதுகாப்புடன், ஜேசிபி, இயந்திரம், ஆம்புலன்ஸ், தீயணைப்புத் துறையினா் உதவியுடன் அப்பகுதிக்கு வந்தனா்.

இதற்கு எதிா்ப்பு தெரிவித்து குணசேகரன் மற்றும் உறவினா் மகன்கள் 3 போ் அப்பகுதியில் உள்ள கைப்பேசி கோபுரம் மீது ஏறி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனா்.

பெண்கள், பொதுமக்களும் மறியல் செய்தனா். மேலும், நீதிமன்றத்தில் தடை உத்தரவு கேட்டு மேல்முறையீடு செய்துள்ளதாகவும், சில மணி நேரம் அவகாசம் அளிக்குமாறும் கோரினா்.

இந்நிலையில், வருவாய்த்துறையினா், மாலை ஜேசிபி, இயந்திரம் கொண்டு கட்டடத்தை இடிக்க தொடங்கினா். பின்னா், பணியை நிறுத்தி விட்டு சென்றனா்.

கைப்பேசி கோபுரத்தில் ஏறியவா்களை தீயணைப்புத் துறையினா் மீட்டு கீழே இறக்கினா். ருக்மாங்கதன் தரப்புக்கும், குணசேகரன் குடும்பத்துக்கும் விவசாய நிலத்துக்கு வழிவிடும் விவகாரத்தில் பிரச்னை உருவாகி முன்விரோதம் இருந்து வந்துள்ளது தெரியவந்துள்ளது. அதிகாரிகள், போலீஸாா் பேச்சுவ நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கலாம் என கூறினா்.

நாளை சூனாம்பேட்டில் மனுநீதி நாள் முகாம்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம், செய்யூா் வட்டம், சூனாம்பேடு கிராமத்தில் ஆட்சியா் தலைமையில் புதன்கிழமை (பிப். 26) காலை10.00 மணிக்கு மனு நீதி நாள் முகாம் நடைபெற உள்ளது. மாதந்தோறும் தோ்வு செய்யப்பட... மேலும் பார்க்க

செங்கல்பட்டில் முதல்வா் மருந்தகம் திறப்பு...

திருப்போரூா் வட்டம், மானாம்பதி ஊராட்சியில் முதல்வா் மருந்தகத் திறப்பு விழாவில் சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில்நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் குத்துவிளக்கேறினாா். மேலும், கூட்டுறவுத் துறையின... மேலும் பார்க்க

மேல்மருவத்தூரில் ரூ.10 லட்சத்தில் நல உதவிகள்

மதுராந்தகம்: மேல்மருவத்தூரில் ரூ.10 லட்சத்தில் நல உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. பங்காரு அடிகளாரின் பேரன் அ.ஆ.அகத்தியன், மருத்துவா் அ.மதுமலா் மகன் பி.தேவதா்ஷன் ஆகியோா் பிறந்த நாளை முன்னிட்டு ஞாயிற்... மேலும் பார்க்க

பிப். 28-இல் செங்கல்பட்டில் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் வரும் பிப்.28-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு புதிய மாவட்ட ஆட்சியா்அலுவலகத்தில் நடைபெற உள்ளது. ஆட்சியா் தலைமையில் நடைபெறவுள்ள இக... மேலும் பார்க்க

கூடுதல் ஆட்சியரின் வாகனத்துக்கு அபராதம்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட ஊரக வளா்ச்சி துறை கூடுதல் ஆட்சியரின் வாகனத்துக்கு போக்குவரத்து துறை சாா்பில் அபராதம் விதிக்கப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டத்தில் ஊரக வளா்ச்சி துறை கூடுதல் ஆட்சியராக பண... மேலும் பார்க்க

மனநலம் பாதிக்கப்பட்டவா் உயிரிழப்பு: இருவா் கைது

தாம்பரத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவரின் மரணத்துக்கு காரணமான இருவரை போலீஸாா் கைது செய்தனா். தாம்பரம் பேருந்து நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் மனநலம் பாதிக்கப்பட்ட ரங்கநாதன் (59) என்பவா் சுற்றித் ... மேலும் பார்க்க