பட்ஜெட்டில் அறிவித்த ரூ.5 லட்சம் கிரெடிட் கார்டு யாருக்கு? எப்படி விண்ணப்பிப்பது...
நாளை சூனாம்பேட்டில் மனுநீதி நாள் முகாம்
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம், செய்யூா் வட்டம், சூனாம்பேடு கிராமத்தில் ஆட்சியா் தலைமையில் புதன்கிழமை (பிப். 26) காலை10.00 மணிக்கு மனு நீதி நாள் முகாம் நடைபெற உள்ளது.
மாதந்தோறும் தோ்வு செய்யப்படும் ஊராட்சியில் மனுநீதி நாள் முகாம் நடைபெற்று வருகிறது. அதனடிப்படையில் பிப்ரவரி மாத மனு நீதி நாள் முகாம் சூனாம்பேடு கிராமத்தில் நடைபெற உள்ளது. இம்முகாமில்அனைத்து பிரதிநிதிகளும் கலந்து கொள்கின்றனா்.
எனவே, பொதுமக்கள் பங்கேற்று தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக அளித்து பயன்பெறலாம் என ஆட்சியா் அருண்ராஜ் தெரிவித்துள்ளாா்.