செய்திகள் :

ஆக்கிரமிப்பை அகற்ற வந்த அதிகாரிகள்; ஜே.சி.பி முன்பு குழந்தையோடு அமர்ந்த பெண்கள்! - கரூர் களேபரம்

post image

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் பேரூராட்சிக்கு சொந்தமாக கிழக்கு காலனி பகுதியில் சுமார் 14 சென்ட் நிலம் உள்ளது. இந்த இடத்தினை அதே பகுதியைச் சேர்ந்த இளையராஜா என்பவரது குடும்பத்தினர் ஆக்கிரமிப்பு செய்து வைத்திருந்த்தாகச் சொல்லப்படுகிறது. இது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, அந்த அரசு புறம்போக்கு நிலத்தை அதிகாரிகள் மூலம் கடந்த ஆண்டு மீட்கப்பட்டது. அந்த இடத்தில் பொது கழிவறை கட்டுவதற்கு பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டு அதற்குரிய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

குழந்தையுடன் போராட்டம்

இதற்காக, டெண்டர் முடிந்த பிறகு தற்போது அந்த இடத்தில் கழிவறை கட்டுவதற்கான பணி இன்று தொடங்கியது. அப்போது அதே பகுதியைச் சேர்ந்த தியாகராஜன் மற்றும் அவரது தம்பி இளையராஜா ஆகியோர், ‘இது எங்களுக்குச் சொந்தமான இடம். எனவே, இங்கு கழிவறை கட்டக்கூடாது’ என்று தடுத்து நிறுத்தினர்.

மேலும், இளையராஜா குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் கைக்குழந்தையுடன் ஜே சி பி இயந்திரத்தின் முன்பு அமர்ந்து ஆக்கிரமிப்பை அகற்ற விடாமல் தடுத்தனர். இளையராஜா மற்றும் வழக்கறிஞர் செந்தில் ஆகிய இருவரும் போலீஸார் மற்றும் வருவாய் துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, மாயனூர் காவல் நிலைய போலீஸார் இளையராஜா மற்றும் வழக்கறிஞர் செந்திலை கைது செய்தனர். இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள் என 100-க்கும் மேற்பட்டவர்கள் அரசு அதிகாரியுடன் சேர்ந்து ஆக்கிரமிப்பை அகற்றி பொது கழிவறை அமைக்க அரசு அதிகாரிக்கு ஆதரவாக செயல்பட்டனர்.

ஆக்ரமிப்பு அகற்றும் பணி

தொடர்ந்து இன்ஸ்பெக்டர் சரவணன் சம்பவ இடத்தில் இரு தரப்பு ஆவணங்களையும் சரிபார்த்தார். பின்பு, ‘இது அரசுக்கு சொந்தமான இடம்’ என்பதை உறுதி செய்து கழிவறை கட்டும் பணி தொடங்க பாதுகாப்பளித்தார். அதனைத் தொடர்ந்து, ஜே.சி.பி இயந்திரம் மூலம் அஸ்திவாரம் எடுக்கும் பணி நடந்தது. இந்த சம்பவத்தால் இப்பகுதியில் சிறிது நேரம் அந்தப் பகுதியில் சலசலப்பு ஏற்பட்டது.

`அரசு பள்ளியில் கழிவறை வசதி இல்லை!' - அவசரத்துக்கு அல்லாடும் மாணவர்கள்... திருவாரூர் அவலம்!

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி ஒன்றியம், சவளக்காரன் பகுதியில் அமைந்துள்ளது ஆதிதிராவிடர் தொடக்கப்பள்ளி. 1954 ல் தொடங்கப்பட்ட இப்பள்ளியில் 29 மாணவர்களும் 33 மாணவிகளும் படித்து வருகின்றனர். இதில் பெரும... மேலும் பார்க்க

விஷக் கடியால் உயிரிழந்த சிறுமி; ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்ட உறவினர்கள் - என்ன நடந்தது?

தென்காசி மாவட்டம், இந்த சிவகிரி அருகே உள்ள தென்மலையை சேர்ந்தவர் சுப கார்த்திகா (வயது 9). இவர் வீட்டு அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது அவருக்கு காலில் ஏதோ அடிபட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அடிபட்ட இடத்தில... மேலும் பார்க்க

திருப்பத்தூர்: கட்டிமுடிக்கப்பட்டும் திறக்கப்படாத நியாயவிலைக் கட்டடம்; சிரமப்படும் மக்கள்!

திருப்பத்தூர் மாவட்டத்தில் மாடப்பள்ளி ஊராட்சியில் கடந்த 2021 ஆம் ஆண்டு அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூபாய் 8.59 லட்சம் மதிப்பீட்டில் புதிய நியாய விலை கட்டடம் கட்டி முடிக்கப்பட்டது. இந்த நியாயவில... மேலும் பார்க்க

செஞ்சி பேருந்து நிலையக் கழிவறையில் கட்டண வசூல்; சுட்டிக்காட்டிய விகடன் -நடவடிக்கை எடுத்த அதிகாரிகள்!

செஞ்சி பேரூராட்சியில் புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டு ஒரு வருட காலமான நிலையில், பொது கழிவறை இல்லாமல் மக்கள் அவதிப்பட்டு வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்த வண்ணம் இருந்தது. இதனால் அலுவலக பணியாளர்கள், ... மேலும் பார்க்க

`விஜய் ஒன்றிய அரசு அனுமதியுடன் பள்ளி நடத்துகிறார்; அண்ணாமலைக்கு சவால் விடுகிறேன்' - உதயநிதி காட்டம்!

'மும்மொழிக் கொள்கையை ஏற்றால்தான் நிதி தருவோம்' என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியது தமிழ்நாட்டில் பெரும் விவாவதப் பொருளாகியிருக்கிறது.இதையடுத்து இந்தித் திணிப்புக்கு எதிராகவும்... மேலும் பார்க்க

"தமிழ்நாட்டுக்கான 2,152 கோடி ரூபாய் நிதியை விடுவிக்க வேண்டும்!" - மோடிக்கு ஸ்டாலின் வேண்டுகோள்

மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், 'தமிழ்நாடு அரசு புதிய கல்விக் கொள்கையை ஏற்க மறுக்கிறது. மும்மொழிக் கொள்கையை ஏற்றால்தான் நிதி தருவோம்' என்று பேசியது சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.மத்தி... மேலும் பார்க்க