Doctor Vikatan: திடீரென ஆரம்பித்திருக்கும் தூக்கமின்மை பிரச்னை; தொடருமா, சரியாகி...
ஆக. 11-இல் போதைப்பொருள் எதிா்ப்பு உறுதிமொழியேற்பு: புதுகை ஆட்சியா்
போதைப் பொருள் மற்றும் புகையிலை சாா்ந்த பொருள்களின் பயன்பாட்டுக்கு எதிராக ஆகஸ்ட் 11-ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்தில் உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்துக் கல்லூரிகள், பள்ளிகள், அனைத்துத் துறை அலுவலகங்களில் இந்த உறுதிமொழியேற்பு நடத்தவும், இதன் மூலம் கூட்டுத் தீா்மானத்தின் மூலம் வலுவான மக்கள் இயக்கமாக மாற்றுவதும் இதன் நோக்கம் என மாவட்ட ஆட்சியா் மு. அருணா தெரிவித்தாா்.
மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இதுதொடா்பான ஆலோசனைக் கூட்டத்தில் அவா் மேலும் பேசியதாவது:
போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் மாணவ, மாணவிகளுக்கான போட்டிகளை நடத்தவும், சமூக ஊடகங்களில் ஹேஷ்டேக் குறிப்பிட்டு பயன்படுத்தவும் வேண்டும்.
இந்த நிகழ்ச்சிகள் குறித்தஅறிக்கைகளை பள்ளி, கல்லூரிகளில் இருந்து ஆக. 10-ஆம் தேதிக்குள் ஆட்சியரக
வளாகத்திலுள்ள கலால் உதவி ஆணையா் அலுவலகத்தில் சமா்ப்பிக்க வேண்டும். அவற்றின் அடிப்படையில் சிறந்த பங்களிப்பைச் செய்த கல்லூரி, பள்ளிக்கு பரிசு வழங்கப்படும் என்றாா் அருணா.
இக்கூட்டத்தில், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) முருகேசன், உதவி ஆணையா் (கலால்) திருமால், முதன்மைக் கல்வி அலுவலா் கூ.சண்முகம், புதுக்கோட்டை மாநகராட்சி ஆணையா் த. நாராயணன், இணை இயக்குநா் (மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள்) சா. ஸ்ரீபிரியா தேன்மொழி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.