செய்திகள் :

'நாங்க வாக்குறுதியே கொடுக்கல; நீங்க எந்த பிரஸ்ஸூ?' - ரிப்பன் மாளிகையில் சேகர் பாபு பல்டி!

post image

சென்னை ரிப்பன் மாளிகைக்கு வெளியே 9 வது நாளாக தூய்மைப் பணியாளர்கள் போராடி வருகின்றனர். மண்டலங்களை தனியார்மயப்படுத்தக் கூடாது என்பதும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பதும் அவர்களின் கோரிக்கை. இந்நிலையில், நேற்று நள்ளிரவில் அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியா ஆகியோர் போராட்டக் குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர்.

சேகர் பாபு
சேகர் பாபு

இரண்டரை மணி நேரத்துக்கு மேல் நடந்த பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. பேச்சுவார்த்தை முடிந்த பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்த சேகர் பாபு, பத்திரிகையாளர்களின் கேள்விகளை எதிர்கொள்ள முடியாமல் ஆவேசமடைந்தார்.

9 மணிக்கே பேச்சுவார்த்தை தொடங்கிவிட்டது. 1:50 மணியளவில்தான் அமைச்சர் சேகர் பாபுவும் மேயர் பிரியாவும் பேச்சுவார்த்தையை முடித்து வெளியே வந்தனர். 'பேச்சுவார்த்தை எப்படி போச்சு...' என ஒரு பத்திரிகையாளர் கேட்க, 'பேச்சுவார்த்தையா என்ன பேச்சுவார்த்தை...' என கடுப்பான முகத்துடன் கேட்டார் சேகர்பாபு. 'தூய்மைப் பணியாளர்களுக்கு பணி நிரந்தரம் செய்யப்படும்னு தேர்தல் வாக்குறுதி கொடுத்திங்களே...' என ஒரு பத்திரிகையாளர் கேட்க, 'இல்ல...நீங்க கொடுங்க..நாங்க கொடுத்த வாக்குறுதியை கொடுங்க...கொடுங்க...கொடுங்க...' என அந்த பத்திரிகையாளர் மீது பாய்ந்தார்.

சேகர் பாபு
சேகர் பாபு

'திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாக்குறுதி கொடுத்தாரே...' என இன்னொரு செய்தியாளர் பாலோ அப் கேள்வியை போட அதற்கும் சேகர் பாபு டென்ஷன் ஆனார். 'வாக்குறுதி கொடுக்கலை...நீங்க எந்த பிரஸ்ஸூ' என கேட்டார். அவர், 'நீலம்' என சொல்ல, 'நான் பத்திரிகையாளர்களைதான் சந்திக்கிறேன். உங்களை சந்திக்கலை...' என வெடுக்கென கேள்வியை கட் செய்தார்.

சேகர் பாபு
சேகர் பாபு

மேற்கொண்டு பேசியவர், 'அவங்களும் எங்க மக்கள்தான். எங்களோட ஊன், உடல் உயிரோட கலந்திருக்காங்க. அவங்க தரப்பு நியாயத்தை சொல்லிருக்காங்க. அரசால் என்ன செய்ய முடியும்னு நாங்க சொல்லிருக்கோம். நாளை மதியம் மீண்டும் சந்திக்கிறோம். பேசிவிட்டு இருதரப்பும் சேர்ந்தே உங்களை சந்திக்கிறோம்.' என்றார்.

ட்ரம்ப் - புதின் சந்திப்பு எப்போது, எங்கே? - வெளியான தகவல்! இது இந்தியாவுக்கு கைக்கொடுக்குமா?

அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பொறுப்பேற்பதற்கு முன்பும், இப்போதும், அவருக்கு இருக்கும் முக்கியமான கொள்கைகளில் ஒன்று, 'ரஷ்யா - உக்ரைன் போர் நிறுத்தம்'. துருக்கியில் இந்தப் போர் நிறுத்தத்திற்காக இரு நாடுகளும... மேலும் பார்க்க

’முதல்வருக்கே சாபம் போடுறீங்க; நாங்க நினைச்சிருந்தா' - சமரசப் பேச்சுவார்த்தையில் எகிறிய சேகர் பாபு?

சென்னை ரிப்பன் மாளிகைக்கு வெளியே 9 வது நாளாக தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தங்களின் மண்டலங்களை தனியார்மயப்படுத்தக் கூடாது என்பதும், பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பதுமே இவர்களின்... மேலும் பார்க்க

Rahul Gandhi Dinner : INDIA கூட்டணியின் 4 முக்கிய முடிவுகள்? | ECI BJP | Imperfect Show 8.8.2025

* ராகுல் காந்தி இல்லத்தில் இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் முக்கிய ஆலோசனை!* ராகுல் காந்தி தேசத்திற்கு ஒரு சேவையைச் செய்துள்ளார் - கபில் சிபல்* பிரதமர் மோடிக்கு நடிகர் பிரகாஷ்ராஜ் கேள்வி? * ராகுல் காந்... மேலும் பார்க்க

PMK: "நீதிக்கும் அறத்திற்கும் கிடைத்த வெற்றி" - ராமதாஸ் தரப்பு மனு தள்ளுபடி ஆனது குறித்து அன்புமணி

பாமக நிறுவனர் ராமதாஸ் சமீபத்தில் ஆகஸ்ட் 17-ம் தேதி பொதுக்குழு கூட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தார்.அதைத்தொடர்ந்து, பாமக தலைவர் அன்புமணி ஆகஸ்ட் 9-ம் தேதி பொதுக்குழு கூட்டம் நடத்தப்போவதாக அறிவித்தார்.இத... மேலும் பார்க்க

அன்புமணி நடத்தும் பொதுக்குழுவுக்குத் தடையில்லை; ராமதாஸ் தரப்பு மனுவை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம்!

பாமக-வில் நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆகியோருக்கிடையில் நடைபெற்று வரும் கட்சி நிர்வாக மோதலுக்கு மத்தியில், ஆகஸ்ட் 17-ம் தேதி பொதுக்குழு கூட்டப்போவதாக ராமதாஸ் அறிவித்திருந்தார்.உடனே அன்புமணி அதற்... மேலும் பார்க்க