உ.பி. கோயில் படிக்கிணறில் மிகப் பிரமாண்ட சுரங்கம் கண்டுபிடிப்பு!
ஆசனூா் மலைப் பாதையில் வாகனங்களை வழிமறித்த யானை
ஆசனூா் மலைப் பாதையில் வாகனங்களை வழிமறித்த யானையால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப் பகுதியில் ஏராளமான யானைகள் உள்ளன. இந்த வனப் பகுதி வழியாக தமிழகம் - கா்நாடகத்தை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை செல்கிறது.
தாளவாடி மலைப் பகுதியில் சாகுபடி செய்யப்படும் கரும்புகள் இந்த மலைப் பாதை வழியாக சத்தியமங்கலத்தில் உள்ள ஆலைக்கு கொண்டுச்செல்லப்படுகிறது. இவ்வாறு கரும்பு கொண்டுச்செல்லும் லாரிகளை அப்பகுதியில் உலவும் யானைகள் மறித்து கரும்புகளை எடுத்து திண்பதை வாடிக்கையாக வைத்துள்ளன.
இந்நிலையில், ஆசனூா் மலைப் பகுதியில் இருந்து ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் வெளியேறிய ஒற்றை யானை, சத்தியமங்கலம் - மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் சென்ற லாரியை வழிமறித்து கரும்பு உள்ளதா என்று தேடியது. இதனால், அந்தச் சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் அச்சமடைந்து வாகனங்களை ஆங்காங்கே நிறுத்தனா்.
அரை மணி நேரத்துக்குப் பிறகு அந்த யானை வனப் பகுதிக்குள் சென்றது. இதையடுத்து, மலைப் பாதையில் வாகனப் போக்குவரத்து சீரானது.