செய்திகள் :

ஆசியக் கோப்பையில் ஷ்ரேயாஸ் ஐயர் இடம்பெறாததன் காரணம் இதுதானா? அமித் மிஸ்ரா கூறுவதென்ன?

post image

ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் ஷ்ரேயாஸ் ஐயர் இடம்பெறாதது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் அமித் மிஸ்ரா பேசியுள்ளார்.

ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று (செப்டம்பர் 9) முதல் தொடங்குகிறது. அபு தாபியில் இன்று நடைபெறும் முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஹாங் காங் அணிகள் விளையாடுகின்றன.

இந்திய அணி நாளை (செப்டம்பர் 10) நடைபெறும் அதன் முதல் போட்டியில் ஐக்கிய அரபு அமீரகத்தை எதிர்த்து விளையாடுகிறது. அதன் பின், செப்டம்பர் 14 ஆம் தேதி நடைபெறும் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.

அமித் மிஸ்ரா கூறுவதென்ன?

ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கும் நிலையில், ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் ஷ்ரேயாஸ் ஐயர் இடம்பெறாதது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் அமித் மிஸ்ரா பேசியுள்ளார்.

இந்திய அணியில் நடுவரிசையில் வலதுகை, இடதுகை பேட்டர்களின் காம்பினேஷனை உறுதிப்படுத்தவே ஷ்ரேயாஸ் ஐயர் அணியில் சேர்க்கப்படாமல் இருந்திருக்கலாம் என அமித் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்திய அணியில் ஷ்ரேயாஸ் ஐயர் மூன்றாவது அல்லது நான்காவது வீரராக களமிறங்குவார் என நினைக்கிறேன். ஆசியக் கோப்பையில் இந்திய அணியின் நடுவரிசையில் வலதுகை, இடதுகை காம்பினேஷன் முக்கியம் என அணி நிர்வாகம் நினைத்திருக்கலாம். அதன் காரணமாக ஆசியக் கோப்பைக்கான இந்திய அணியில் ஷ்ரேயாஸ் ஐயருக்கு இடம் கிடைக்காமல் போயிருக்கலாம். ஆசியக் கோப்பை நீண்ட கிரிக்கெட் தொடர். இடதுகை, வலதுகை காம்பினேஷனை உறுதி செய்வதில் ஷ்ரேயாஸ் ஐயருக்கு இடமின்றி போயிருக்கலாம்.

அடுத்தடுத்து இந்திய அணி நிறைய தொடர்களில் விளையாடவுள்ளது. ஷ்ரேயாஸ் ஐயருக்கு நிறைய நேரமிருக்கிறது. அவர் கண்டிப்பாக இந்திய அணியில் மீண்டும் இடம்பிடிப்பார் என்பதில் நான் 100 சதவிகிதம் உறுதியாக இருக்கிறேன். ஷ்ரேயாஸ் ஐயரின் ஃபார்ம் காரணமாக அவர் அணியில் சேர்க்கப்படவில்லை என நான் நினைக்கவில்லை. புதிய வீரர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்பதற்காக அவர் அணியில் இல்லை என நினைக்கிறேன். எதிர்காலத்தில் அவர் அணியில் மீண்டும் இடம்பிடிப்பார் என்றார்.

கடந்த ஆண்டு பிசிசிஐ-ன் மத்திய ஒப்பந்தத்தில் ஷ்ரேயாஸ் ஐயர் இடம்பெறவில்லை. அதன் பின், சிறப்பாக விளையாடிய ஷ்ரேயாஸ் ஐயர் பஞ்சாப் கிங்ஸ் அணியை இறுதிப்போட்டி வரை அழைத்துச் சென்றார். ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர், 50-க்கும் அதிகமான சராசரியில் 604 ரன்கள் குவித்தார்.

ஆசியக் கோப்பைக்கான இந்திய அணியில் ஷ்ரேயாஸ் ஐயர் சேர்க்கப்படாதது ரசிகர்கள் மட்டுமின்றி, முன்னாள் வீரர்கள் பலரையும் பிசிசிஐ மீது கோபம் கொள்ளச் செய்தது குறிப்பிடத்தக்கது.

Former Indian cricketer Amit Mishra has spoken out about Shreyas Iyer's exclusion from the Indian team for the Asia Cup cricket series.

இதையும் படிக்க: பேஸ்பால் யுக்தியை தவறாக புரிந்துகொண்டு வீரர்களை அவமதிக்காதீர்கள்: பிரண்டன் மெக்கல்லம்

ஆசிய கோப்பை: பந்துவீச்சைத் தேர்வு செய்த இந்தியா!

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு எதிரான போட்டியில் இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் துபையில் நடைபெறும் இன்றையப் போட்டியில் இந்தியா மற்... மேலும் பார்க்க

உலகை வெல்லும் முன்பு ஆசியாவை வெல்வோம்: சூர்யகுமார் யாதவ்

டி20 உலகக் கோப்பையை வெல்வதற்கு முன்பாக ஆசியக் கோப்பையை வெல்வோம் என இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் கிரிக்கெட் தொடர் நேற்று தொடங்கியது. அபு தாபி... மேலும் பார்க்க

ஐசிசி டி20 தரவரிசை வெளியீடு; இந்திய வீரர்கள் முன்னேற்றம்!

சர்வதேச டி20 போட்டிகளில் சிறந்த வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலை ஐசிசி இன்று (செப்டம்பர் 10) வெளியிட்டுள்ளது.ஐசிசி வெளியிட்டுள்ள இந்த தரவரிசைப் பட்டியலில் இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவி பிஷ்னோ... மேலும் பார்க்க

ஒருநாள் உலகக் கோப்பை தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு!

ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பைத் தொடருக்கான இலங்கை அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று (செப்டம்பர் 10) அறிவித்துள்ளது.ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற செப்டம்பர் 30 முதல் தொட... மேலும் பார்க்க

ஆண்டர்சன் - பவுமா: எஸ்ஏ20 ஏலத்தில் தேர்வாகாத நட்சத்திர வீரர்கள்!

எஸ்ஏ20 ஏலத்தில் முக்கியமான சில நட்சத்திர வீரர்களை ஏலத்தில் எடுக்காதது ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. எஸ்ஏ20 ஏலத்தில் அதிகபட்ச தொகைக்கு டெவால்டு பிரெவிஸ் கேபிடல்ஸ் அணி எடுத்து வரலாற... மேலும் பார்க்க

16 இடங்கள் முன்னேறி தனது உச்சத்தை அடைந்த ஜோஃப்ரா ஆர்ச்சர்!

இங்கிலாந்து வேகப் பந்துவீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் தனது கிரிக்கெட் வாழ்க்கையின் உச்சநிலையை அடைந்துள்ளார். ஆர்ச்சர் தனது ஒருநாள் ஐசிசி தரவரிசையில் முதன்முதலாக மூன்றாம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.... மேலும் பார்க்க