நாகா்கோவிலில் ரூ.14.92 லட்சம் மதிப்பிலான வளா்ச்சிப் பணிகள் தொடக்கம்
ஆண்டர்சன் - பவுமா: எஸ்ஏ20 ஏலத்தில் தேர்வாகாத நட்சத்திர வீரர்கள்!
எஸ்ஏ20 ஏலத்தில் முக்கியமான சில நட்சத்திர வீரர்களை ஏலத்தில் எடுக்காதது ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
எஸ்ஏ20 ஏலத்தில் அதிகபட்ச தொகைக்கு டெவால்டு பிரெவிஸ் கேபிடல்ஸ் அணி எடுத்து வரலாறு படைத்தது.
தென்னாபிரிக்க அணிக்கு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வென்றுகொடுத்த கேப்டன் டெம்பா பவுமா இந்த எஸ்ஏ20 ஏலத்தில் எடுக்கப்படவில்லை.
இங்கிலாந்தின் ஜாம்பவான் பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சனும் இந்தத் தொடரில் ஏலத்தில் எடுக்காதது ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வரிசையில் ஜேசன் ராய், மொயின் அலி, ரஹ்மானுல்லா குர்பாஸ், குசால் ஃபெரேரா, முஸ்தபிசூர் ரஹ்மான், ஜூனியர் தாலா, ஆன்டிலே பெஹ்லுக்வாயோ இருப்பது கவனிக்கத்தக்கது.
எஸ்ஏ20 சீசன் 4 போட்டிகள் வரும் டிச.26 முதல் அடுத்தாண்டு ஜனவரி 25 வரை நடைபெற இருக்கின்றன.