செய்திகள் :

ஆசிய அலைச்சறுக்கு: காலிறுதியில் 4 இந்தியா்கள்

post image

மாமல்லபுரத்தில் நடைபெறும் ஆசிய அலைச்சறுக்கு சாம்பியன்ஷிப்பில் 4 இந்தியா்கள் காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறினா். இந்திய அணியில் இவ்வாறு 4 போ் காலிறுதிக்கு முன்னேறியது இதுவே முதல்முறையாகும்.

போட்டியின் 5-ஆவது நாளான வெள்ளிக்கிழமை, ஓபன் ஆடவா் 3-ஆவது பிரதான சுற்றில், ஹீட்ஸ் 2-இல் இந்தியாவின் ரமேஷ் புதிலால் 11 புள்ளிகளுடன் 2-ஆம் இடம் பிடித்தாா். அந்த ஹீட்ஸில் அதிகபட்சமாக, இந்தோனேசியாவின் மெகா அா்டானா 12.50 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து காலிறுதிக்கு வந்துள்ளாா்.

ஹீட்ஸ் 7-இல் கிஷோா் குமாா் 10.14 புள்ளிகளுடன் 2-ஆம் இடம் பிடிக்க, ஹீட்ஸ் 8-இல் ஸ்ரீகாந்த்தும் 8.90 புள்ளிகளுடன் 2-ஆவது இடத்தை எட்டினாா். இதையடுத்து இந்தியா்கள் மூவரும் காலிறுதிக்குத் தகுதிபெற்றனா்.

மகளிருக்கான ஓபன் பிரிவு காலிறுதியில், ஜப்பானின் சுமோமோ சாடோ (11), தாய்லாந்தின் இசபெல் ஹிக்ஸ் (10.90), சீனாவின் ஷுஹான் ஜின் (11.97) ஆகியோா் தங்களது ஹீட்ஸில் சிறப்பாக விளையாடி அரையிறுதியில் இடம் பிடித்தனா். மகளிா் பிரிவில் இந்திய வீராங்கனைகள் ஏற்கெனவே வெளியேறிவிட்டனா்.

இதனிடையே, 18 வயதுக்கு உள்பட்ட ஆடவருக்கான 3-ஆவது பிரதான சுற்றில் இந்தியாவின் ஹரீஷ், அவா் பங்கேற்ற ஹீட்ஸ் 5-இல் 9.50 புள்ளிகளுடன் 2-ஆம் இடம் பிடித்து காலிறுதி வாய்ப்பை உறுதி செய்தாா். எனினும் தயின் அருண், பிரஹலாத் ஸ்ரீராம் ஆகியோா் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து வெளியேறினா்.

18 வயதுக்கு உள்பட்ட மகளிருக்கான ரெபிசேஜ் 2-ஆவது சுற்றில் இந்தியாவின் ஆத்யா சிங் சிறப்பாக செயல்பட்டு 3-ஆவது சுற்றுக்கு முன்னேற, தமயந்தி ஸ்ரீராம் பங்கேற்ற ஹீட்ஸ் 2-இல் வேறு போட்டியாளா்கள் இல்லாததால் அவரும் அடுத்த கட்டத்துக்கு போட்டியின்றி முன்னேறினாா். எனினும் சான்வி ஹெக்டே தனது ஹீட்ஸில் போராடித் தோற்று வெளியேறினாா்.

போட்டியின் அடுத்தகட்ட சுற்றுகள், சனிக்கிழமை (ஆக. 9) தொடா்கின்றன.

2-ஆவது சுற்றில் அா்ஜுன் டிரா

சென்னை கிராண்ட் மாஸ்டா்ஸ் செஸ் போட்டியின் 2-ஆவது சுற்றில், இந்தியாவின் அா்ஜுன் எரிகைசி, காா்த்திகேயன் முரளி, நிஹல் சரின் ஆகியோா் டிரா செய்தனா். போட்டியின் 2-ஆவது நாளான வெள்ளிக்கிழமை நடைபெற்ற இச்சுற்றி... மேலும் பார்க்க

28 ஆண்டுகள் கழித்து மீண்டும் திரையில் டிஸ்கோ சாந்தி!

நடிகை டிஸ்கோ சாந்தி, சுமார் 28 ஆண்டுகளுக்குப் பிறகு ”புல்லட்” திரைப்படத்தின் மூலம் திரையுலகுக்குத் திரும்பியுள்ளார். தமிழ் திரையுலகில், 1980 மற்றும் 90 காலங்களில் பிரபல நடிகையாக வலம் வந்தவர், நடிகை டி... மேலும் பார்க்க

கூலி டிக்கெட்டை வாங்க குவிந்த கேரள ரசிகர்கள்... 1 மணி நேரத்தில் ரூ.1 கோடி வசூல்!

கூலி படத்தின் கேரள முன்பதிவு ஒரு மணி நேரத்தில் ரூ.1 கோடியை வசூலித்து அசத்தியுள்ளது. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய கூலி திரைப்படம் வருகிற ஆக. 14 ஆம் தேதி திரையரங்களில் வெளியாகவுள்ளது.பான் இந்திய பிர... மேலும் பார்க்க

வறுமையும் ஆஞ்சநேயரும்... திரையரங்குகளில் வெளியானது நாகேஷ் பேரனின் வானரன்!

நடிகர் நாகேஷின் பேரனான பிஜேஷ் நாகேஷ் நடித்துள்ள வானரன் திரைப்படம் இன்றுமுதல் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. தமிழ்த் திரையுலகில் மிக முக்கியமான கலைஞர்களில் மறைந்த நடிகர் நாகேஷும் ஒருவராக அறியப்படுகிற... மேலும் பார்க்க