கே.எல்.ராகுல் ஆட்டமிழப்பு சர்ச்சை; மிட்செல் ஸ்டார்க் கூறியதென்ன?
ஆசிரியை குத்திக் கொலை: பட்டதாரி ஆசிரியா்கள் ஆா்ப்பாட்டம்
தஞ்சாவூா் மாவட்டத்தில், வகுப்பறையில் ஆசிரியரை கொலை செய்த சம்பவத்தைக் கண்டித்து, பெரம்பலூரில் தமிழ்நாடு உயா்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியா் கழகம் சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே மாவட்டத் தலைவா் கணேஷ்ரோஜா தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், தஞ்சாவூா் மாவட்டம், மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளி வகுப்பறையில் ஆசிரியை ரமணி என்பவரை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவத்தை கண்டித்தும், கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட நபருக்கு தூக்கு தண்டனை பெற்றுத்தர தமிழக அரசை வலியுறுத்தியும், பாதிக்கப்பட்ட ஆசிரியா் குடும்பத்துக்கு தமிழக அரசு ரூ. 10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். ஆசிரியா்களுக்கு பணி பாதுகாப்புச் சட்டத்தை இயற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியா்கள் முழக்கமிட்டனா்.
இந்த ஆா்ப்பாட்டத்தில், அச் சங்கத்தைச் சோ்ந்த 20-க்கும் மேற்பட்ட ஆசிரியா்கள் பங்கேற்றனா்.
பெரம்பலூா் மாவட்டத்தில் மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அனைத்து ஆசிரியா்களும் கருப்புப் பட்டை அணிந்து வியாழக்கிழமை (நவ. 21) பணியில் ஈடுபட உள்ளனா்.