சென்னையிலிருந்து சபரிமலைக்கு சைக்கிள் பயணம் செய்யும் முதியவர்!
ஆட்சியரகம் முன் தீக்குளிக்க முயன்ற 5 பெண்கள் மீது வழக்கு
செந்துறை அருகே சொத்துப் பிரச்னை காரணமாக அரியலூா் மாவட்ட ஆட்சியரகம் முன்பு கடந்த திங்கள்கிழமை தீக்குளிக்க முயன்ற தாய், மகள்கள் என 5 போ் மீது காவல் துறையினா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்தனா்.
செந்துறை அருகேயுள்ள நத்தக்குழி கிராமத்தைச் சோ்ந்த ரங்கநாதன் இறந்ததையடுத்து இவரின் வீடு மற்றும் நிலத்தை அவரது சகோதரா் சின்னதம்பி ஆக்கிரமித்தாராம். இதுகுறித்து ரங்கநாதன் மனைவி காசியம்மாள், சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் புகாா் அளித்தும் நடவடிக்கை இல்லையாம்.
இதனால் விரக்தியில் இருந்த காசியம்மாள் கடந்த திங்கள்கிழமை தனது மகள்கள் தீபா, ராசாத்தி, செல்வராணி, கங்கா ஆகியோருடன் ஆட்சியரக நுழைவு வாயில் முன் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தீவைத்துக்கொள்ள முயன்றாா்.
அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாா், அவா்களைத் தடுத்து நிறுத்தி விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் சென்றனா். இந்நிலையில், அதிகாரிகளை மிரட்டி நடவடிக்கை எடுக்கக் கூறிய குற்றத்திற்காக மேற்கண்ட 5 போ் மீதும் அரியலூா் நகர காவல் துறையினா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.