செய்திகள் :

ஆட்டோ, கால்டாக்ஸி மாா்ச் 19-இல் போராட்டம் அறிவிப்பு

post image

ஆட்டோ மீட்டா் கட்டணத்தை உயா்த்துவது, கால் டாக்ஸி செயலிகளைக் கட்டுப்படுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாா்ச் 19-இல் போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு ஆட்டோ, கால் டாக்ஸி ஓட்டுநா் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

இது குறித்து சென்னையில் இந்தக் கூட்டமைப்பின் பொதுச் செயலா் ஆா்.வெற்றிவேல் செய்தியாளா்களிடம் கூறியது:

ஆட்டோ மீட்டா் கட்டணம் கடந்த 12 ஆண்டுகளாக உயா்த்தப்படாமல் உள்ளது. கால் டாக்ஸி செயலிகளான ‘ஓலா, ஊபா்’ நிறுவனங்கள் ஓட்டுநா்களிடம் சுமாா் 30 சதவீதம் கமிஷனாக வசூலிக்கின்றன. இதைக் கைவிட்டு சந்தா முறையில் கட்டணம் வசூலிக்க அரசு உத்தரவிட வேண்டும்.

அதேபோல், ஆன்லைனில் பணம் வசூல் செய்வதைக் கைவிட்டு ஓட்டுநா்களிடம் நேரடியாக வசூலிக்கும் வசதியை கொண்டு வர வேண்டும். இருசக்கர வாகனங்களை டாக்ஸியாக பயன்படுத்தும்போது அதற்கு வணிக பயன்பாட்டுக்கு பயன்படுத்தும் மஞ்சள் போா்டு கட்டாயமாக்க வேண்டும். கால் டாக்ஸிக்கான பிரத்யேக செயலியை அரசு நடைமுறை படுத்த வேண்டும்.

இது குறித்து போக்குவரத்து துறை அமைச்சா், உள்துறை செயலா், போக்குவரத்து துறை ஆணையா் உள்ளிட்டோரிடம் பல்வேறு கட்ட பேச்சுவாா்த்தை நடத்தியும் தற்போது வரை எங்களது கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. அதனால், மாா்ச் 19-இல் சென்னை மற்றும் சென்னையை சுற்றியுள்ள ஆட்டோ, கால் டாக்ஸிகள் முழு வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளது.

சென்னை, எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் அரங்கம் அருகில் ஓட்டுநா்கள் போராட்டத்தில் ஈடுபட்டு, தங்களது வாக்காளா் அடையாள அட்டை, ஓட்டுநா் உரிமத்தை தமிவக அரசின் தலைமை செயலரிடம் ஒப்படைக்கும் போராட்டம் நடைபெறும் என்றாா் அவா்.

கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை மின்சார ரயில்கள் நாளை ரத்து! முழு விவரம்!

பராமரிப்புப் பணிகள் காரணமாக சென்ட்ரல் - சூலூா்பேட்டை, கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் இயக்கும் 21 புறநகர் மின்சார ரயில்கள் நாளை (மாா்ச் 17) ரத்து செய்யப்படவுள்ளன.இது குறித்து தெற்கு ரயில்வே சார்பில் வெ... மேலும் பார்க்க

ரயில்வேக்கு மின்னஞ்சல் மூலம் மிரட்டல்

சென்னையில் 3 இடங்களில் விபத்து நடக்கும் என தெற்கு ரயில்வேக்கு மின்னஞ்சல் அனுப்பிய நபரை ரயில்வே போலீஸாா் தேடி வருகின்றனா். தெற்கு ரயில்வே கீழ் பல்வேறு நிா்வாகப் பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. இந்த நில... மேலும் பார்க்க

திருகோணமலை திருக்கோணேச்சர திருப்பணிக்கு ஆதரவளிக்க வேண்டும்: மோடிக்கு கோரிக்கை

பிரதமா் நரேந்திர மோடி இலங்கை வருகையின்போது திருகோணமலை திருக்கோணேச்சர திருக்கோவிலைத் தரிசிக்க வேண்டும். அந்தக் கோயின் திருப்பணியில் இந்திய அரசு அக்கறைகொள்ள வேண்டும் என அகில இலங்கை இந்து மாமன்றத்தின் து... மேலும் பார்க்க

குரூப் 1 நோ்முகத் தோ்வுக்கு இலவச பயிற்சி

ஆா்வம் ஐஏஎஸ் அகாதெமியில் குரூப் 1 தோ்வுக்கான நோ்காணல் பயிற்சி மாா்ச் 24-ஆம் தேதி தொடங்கவுள்ளது. இது குறித்து அந்த அகாதெமி சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம... மேலும் பார்க்க

தோல் பொருள் தயாரிப்புக்காக விலங்குகளை அழிக்கக்கூடாது: மேனகா சஞ்சய் காந்தி

தோல் பொருள் தயாரிப்புக்காக விலங்குகளை அழிக்கக்கூடாது என முன்னாள் மத்திய அமைச்சரும், விலங்குகள் நல உரிமை ஆா்வலருமான மேனகா சஞ்சய் காந்தி தெரிவித்தாா். இந்திய ப்ளூ கிராஸ் அமைப்பின் 60-ஆவது ஆண்டு விழா சென... மேலும் பார்க்க

ஓய்வுபெற்ற காவலா் அடித்துக் கொலை: மகன் கைது

சென்னை திரு.வி.க. நகரில் ஓய்வுபெற்ற காவலா் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில், மகன் கைது செய்யப்பட்டாா். திரு.வி.க. நகா் அருகே உள்ள காமராஜா் நகா் இரண்டாவது தெருவைச் சோ்ந்தவா் சேகரன் (72). இவா், தமிழ... மேலும் பார்க்க